தமிழில் எழுத வாரீகளோ? தமிழில்..

சில நாழிகைக்கு முன்பு JOOMLA எனும் ஒரு Content Management System முடைய FORUM மை  பார்க்க நான் நேரிட்டது. அது முற்றிலும் ஒரு இணைய தளத்தை உருவாக்கி பயன்படுத்த உதவும் ஒரு மென்பொருளுடைய இணைய தளமாகும். அத்தகைய இணையத்தளத்தில்   “தமிழ் குழுமம் (Tamil Translation)” என்று ஒரு தலைப்பை  நான் பார்த்த மாத்திரத்திலேயே அதை ஆவலோடு படித்தேன். அதிகமாக ஆங்கில பயனாளர்கள் உலவும் அந்த தளத்தில் தமிழ் குழுமமா? எந்த தமிழனுக்கு தான் ஆவல் வராது அதை படிக்க?

http://forum.joomla.org/viewtopic.php?p=569110

write-in-tamil

தமிழில் விவாதிக்க, தூய தமிழில் எழுத முடியாத வார்த்தைகளை தமிழாக்கம் செய்து எழுத அனைத்து ஜூம்லா பயன்படுத்தும் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தார் அந்த தமிழன்பர். நல்ல முயற்சி..  அடுத்து என்ன? வளர்ந்ததா தமிழ்? இல்லையப்பா… இல்லை…  அடுத்த விவாதமே “எனக்கு தமிழ் எழுத்துக்கள் புரியவில்லை! யாரவது அவர் எழுதியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் அனைத்து மொழிதரப்பினற்கும் பயன்படும்” என்ற தோணியில் எழுதப்பட்டு இருந்தது… என்ன கொடுமை சரவணன் இது??

“ஆங்கிலத்தில் எழுதாதீர்கள்… தமிழில் எழதுங்கள்” என்று எழுதவேண்டுமானால் , அதையும் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் போல இருக்கிறதே? அடேங்கப்பா. இதில் மேலும் கொடுமை என்னவென்றால் தமிழில் அழைப்பு விடுத்த அந்த நண்பரே ஆங்கிலத்தில் அதை மொழிபெயர்க்க வேண்டிய சூழ்நிலையில் இருந்துள்ளார். இதில் கவனிக்கத்தக்க விஷயம், கடைசி வரை தமிழயே அதில் காணவில்லை. பின்பற்றி எழுதிய அனைவரின் விரல்களில் இருந்து ஆங்கில எழுத்துக்களே சிதறியுள்ளது…

ஒரு பக்கத்தில், இலங்கையில் தமிழ் மொழியை கற்பிக்க விடாமல் ஒரு மொழியை அழித்து அதன் இனத்தை அழிக்க முயற்சி நடக்கும் வேலையில். தமிழனை திரட்டி தமிழில் இணையபக்கத்தில் எழுத வைக்க முடியவில்லை என்பது வேதனை அழிக்கக்கூடிய விசயமாக இருக்கிறது. தமிழை வளர்க்க தமிழனே முன்வராததால் தான் இன்னும்  இணையத்தில் தமிழில் எழுச்சி மற்ற மொழிகளை காட்டிலும் மந்தமாகவே இருக்கிறது.

தமிழில் எழுத வாரீகளோ? தமிழில்!!!!!!
அட யாரவது வாங்கப்பா…..

2 thoughts on “தமிழில் எழுத வாரீகளோ? தமிழில்..”

  1. எதோ ஒரு கட்டத்துல மொழிபெயர்ப்பு ஆர்வலர்கள் மொழிபெயர்ப்பு செய்யலைனா இப்போ இருக்கற அளவுக்கு கூட நமக்கு பிற மொழி தகவல்கள் கெடசிருக்காதே நண்பா..இந்த மாதிரி குழுமத்துல கெடைக்கற சில சந்தர்பங்கள வெச்சி வர சந்ததிகளுக்கு தமிழ சுலபமா கொண்டு சேர்கரதுன்னா…கண்டிப்பா என்னாலான எல்லா உதவிகள் செய்ய நான் தயார்..! அட தமிழ்ல தாம்பா..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *