7ஜி ரெயின்போ காலனி என்ற தமிழ் திரைப்படத்தின் நினைத்து நினைத்து பார்த்தேன் பாடலை பிடிக்காதவர்கள் யாரேனும் இருப்பார்களா என்ன? சில வருடங்களுக்கு முன்னால் எல்லோர் மனதையும் கட்டி வைத்த பாடல் அது. அதை முனுமுனுக்காதவர்களும் யாரும் கண்டிப்பாக இருக்க முடியாது. எனக்கும் அது மிகவும் பிடித்த பாடல். கல்லூரி வாழ்கையின் போது அவ்வளவு கிரேஸ் அதன் மேல். அடிக்கடி நான் தனிமையில் பாடும் பாடலில் இதுவும் ஒன்று. நீண்ட மாதங்களாக கிடப்பில் இருந்த இதோ அதன் வீடியோ பாடல் என் குரலில் இப்போது என் வலைப்பூவில்.. ஓரளவிற்கு பீ….ல் பண்ணி பாடி இருக்கேன்.. அதனால அவ்வளவு மோசமா இருக்காதுன்னு நினைக்கிறன்…. ஹி.. ஹீ.. ஹீ.. கேட்டுவிட்டு உங்கள் கருத்துக்களை பதிக்கவும்.. உங்கள் பொறுமைக்கு நன்றி..
[xr_video id=”0301fedebc224ce78a3e05dd9bce0f2e” size=”md”]
இதோ வழக்கம் போல் அதன் பாடல் வரிகளும் போனஸாக…
நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ….
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்து படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ….
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னைக் கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மெளனமா…
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்
உடைந்து போன வளையல் பேசுமா…
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே?
தோளில் சாய்ந்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே!
முதல் கனவு முடிந்திடும் முன்னமே
தூக்கம் கலைந்ததே!
நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்.
உன்னால்தானே நானே வாழ்கிறேன் ஓ….
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா?…
பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா?…
தொடர்ந்து வந்த நிழலும் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
திருட்டு போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்….