தினமணி மாணவர் மலர் 2014இல் “மூளைக்கு வேலை கொடுத்தால் முன்னேறலாம்” என்ற தலைப்பில் வெளியான என் கட்டுரையும் அதன் நகலும். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிரவும். நன்றி.
ஒவ்வொரு நாளும் இணையதளப் பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. உலக அளவில் இணையத்தை பயன்படுத்துவதில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. பள்ளிச் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரையிலும் வயது, பாலினம் வித்தியாசமின்றி இணயத்தை பயன்படுத்துகின்றனர்.
சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு இணையப்பயன்பாடு அன்றாட வாழ்வில் ஓர் அங்கமாகவும் சமூக அந்தஸ்தை காட்டும் விஷயமாகவும் மாறியுள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகளை இருபுறமும் கூர்மையான கத்திக்கு ஒப்பிடுவார்கள். அது இணைய விஷயத்துக்கு மிகவும் பொருத்தமாகவே இருக்கிறது.
அதிகளவில் இணையத்தில் பயன்படுத்தும் இளைஞர்களும், மாணவர்களும் அவற்றை தங்களுக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்தினால் கல்விக்கு உதவுவதுடன் வருவாயை ஈட்டிக்கொடுக்கும் கருவியாகவும் விளங்கும் என்கிறார் சேலத்தை சேர்ந்த இணையதள தொழில் விற்பன்னர் சி.பிரவீண் குமார்.
இன்றைய காலகட்டத்தில் கணினி அறிவியல் மாணவர்களுடன், கலை- அறிவியல் பயிலும் மாணவர்களும் பகுதிநேரமாக கணினி பயில்கின்றனர். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த மாணவர்களும், அதற்கும் குறைவான தகுதியைக்கொண்டு. கணினி மீது தணியாத ஆர்வத்தை கொண்டிருக்கும் இளைஞர்களும், இணயதளத்தில் எழுதுவது, டிசைனிங், ப்ரோக்ராமிங், அனிமேஷன், டேட்டா என்ட்ரி போன்ற பணிகளை எளிதாக செய்ய முடியும்.
மாணவர்கள், தங்களின் ஒய்வு நேரத்திற்கு ஏற்ப, மேற்கண்ட எதில் தங்களுக்கு ஆர்வமும் தகுதியும் இருக்கிறதோ அந்த வேலைகளை வீட்டில், அறையில் இருந்தபடியே இணையத்தின் மூலம் கற்று செய்யலாம். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள பெரிய பெரிய நிறுவனங்கள் தங்களது செலவீனங்களை குறைக்க அவர்களது வேலைகளை இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு வெளிப்பணி ஒப்படைப்பு செய்வது அனைவரும் அறிந்ததே.
ஆனால் அமெரிக்காவில் உள்ள சிறுதொழில் நிறுவனங்கள், தனி நபர் நிறுவனங்கள், சில ஆயிரங்கள், லட்சங்களை மட்டுமே செலவழிக்கக்கூடிய வேலைகளை அல்லது ஓரிருவர் மட்டுமே செய்யக்கூடிய வேலைகளை அப்படி செய்ய இயலாது. அவர்களை போன்றவர்களுக்கும் செலவீனங்களை குறைக்கும் வகையில் இந்தியா, பிலிப்பைன்ஸ் போன்ற குறைந்த ஊதியப்பணியாளர்கள் கிடைக்கும் நாடுகளிலுள்ள சுதந்திர பணியாளர்களை(freelancer) சில வலைத்தளங்கள் இணைக்க அவர்களுடன் இணைத்துவிடும் பணியை செய்கின்றது.
உதாரணமாக odesk.com, elance.com, feelancer.com போன்ற இணையதளங்களின் மூலம் வீட்டில் இருந்தபடியே அத்தகைய நபர்களை தொடர்புகொண்டு வேலை பெற்று பணம் சம்பாதிக்கலாம். அந்த தளங்களை பயன்படுத்தும் நுணுக்கமும், அத்துறையில் தகுதியும், தன்னம்பிக்கையும் இருந்தால் ஏதேனும் ஒரு பெரிய நிறுவனங்களில் வேலை பார்த்து சம்பாதிப்பதை விட மாதம் தோறும் இதில் அதிகம் பணம் ஈட்டக்கூட வாய்ப்புகள் உள்ளது.
எங்கெல்லாம் மக்கள் கூடுகிறார்களோ அங்கெல்லாம் வியாபார சந்தையும் வர்த்தகமும் தோன்றுவது நியதி. இணையம் என்று ஒன்று தோன்றி அதில் மக்கள் கூட்டம் கூட ஆரம்பித்தபோது அங்கும் ஒரு வியாபார சந்தையும் அதில் வர்த்தகமும் தோன்றாமல் இல்லை. பல லட்சம் கோடிகளை குவித்துவைத்துக்கொண்டு இருக்கும் கூகிள் எனும் இனையஜாம்பவானின் 98% வருமானம் தங்களது தேடல் முடிவு பக்கங்களிலும், பல லட்சம் கோடிகளை குவித்துவைத்துக்கொண்டு இருக்கும் கூகிள் எனும் இனையஜாம்பவானின் 98% வருமானம் தங்களது தேடல் முடிவு பக்கங்களிலும், தங்கள் துணை/சார்பு தளங்களில் விளம்பரங்களை விற்று ஈட்டியவையே. சமூகவலைதளங்களில் ராஜாவான ”பேஸ்புக்”கின் பல்லாயிரம் கோடி ஆண்டு வருமானமும் தங்கள் தளத்தில் விளம்பரங்களை விற்பதன் மூலமே சாத்தியப்படுகிறது.
இணையசந்தையின் மதிப்பையும், அதில் நம்பி பல்லாயிரகனகான பெரிய மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் செய்யும் வர்த்தகத்தின் அளவையும் புரிந்து கொள்ள. இந்த இரு நிறுவனங்களுமே சரியான உதாரணம். கூகிள் போன்ற தேடுபொறிகளிலும், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் புது வாடிக்கையாளர்களை கவர்ந்து தங்களது வியாபாரங்களை அவர்கள் பெருக்கிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அநேகமாக அணைத்து தொழில்களும் இப்போது இனைய வாடிக்கையாளர்களை சார்ந்து இருப்பதால் அல்லது அதன் potentialஐ புரிந்து இருப்பதால் சர்ச் இஞ்சின் மார்கடிங் (search engine marketing), சோசியல் மீடியா மார்கடிங் (Social Media Marketing) போன்ற துறைகளில் தேவைகளும், வாய்ப்புகளும் பிரகாசமாக இருக்கிறது.
மாணவப்பருவத்திலேயே இதை கற்றுக்கொண்டு தங்களது திறன்களை மேம்படுத்திக்கொள்ளலாம். ஆர்வம் இருப்பின் இணையத்தின் மூலம் சுயமாக இதை கற்றுக்கொள்ள முடியும்.உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களான பேஸ்புக் நிறுவனர் “மார்க் ஜுக்கர்பர்க்”, கூகிளின் நிறுவனர்கள் “லாரி பேஜ்”, செர்கே பின்” ஆகியோர் தாங்கள் படிக்கும் காலத்தில் விளையாட்டுத்தனமாய் உருவாக்கிய பேஸ்புக், கூகிள் ப்ராஜெக்டுகள் தான் இன்று உலகையே புரட்டிப்போட்டுள்ளன.
புதிய யோசனை, கனவுகளைக் கொண்டுள்ள மாணவர்கள் அவற்றை செயல்படுத்த முன்வந்து, அவர்களுக்கு நண்பர்கள், குடும்பத்தினர் ஊக்கம் இருந்தால், மாணவ தொழில்முனைவோரை நம் கல்வி நிறுவனங்கள் ஊக்கப்படுத்தும் எண்ணம் கொண்டிருந்தால் போதும், கணினி அறிவுள்ள சில புத்திசாலி மாணவர்கள் சேர்ந்து ஓர் இணைய சேவையைத்தொடங்க முடியும். அல்லது ஆன்ட்ராய்ட், ஆப்பில் மொபைல் அப்ளிகேசன்களை தயாரிக்க முடியும்.
அது ஓரளவு பிரபலமானால் கூட குறைந்தபட்சம் அதில் கூகிள் விளம்பரங்களை இணைத்து அதன் மூலம் ஒவ்வொரு கிளிக்கிற்கும் பணம் சம்பாதிக்கலாம். பிரையன் ஆக்டம், ஜான் கோம் என்ற இருவரும் விளையாட்டாக தொடங்கிய மொபைல் அப்ளிகேஷனான வாட்ஸ் ஆப், அண்மையில் பேஸ்புக் நிறுவனத்தால் ஒரு லட்சம் கோடிக்கு மேல் விலை கொடுத்து வாங்கப்பட்டதை மனதில் கொண்டாலே போதும் என்கிறார் பிரவீன் குமார்.