Skip to content
- உன்னை பார்த்த நாள் முதல்,
தப்பிப் பிழைக்கும் தமிழ் கொண்டு
கவிதை எழுதுகிறேன்!
- உன்னை ரசித்த நாள் முதல்,
உன் உருவம் மனங்கண்டு
தனியே பேசுகிறேன்!
- உன்னில் மயங்கிய நாள் முதல்,
விளங்காத ஓர் உணர்வுக்கு
விளக்கம் தேடுகிறேன்!
- உன்னை காதலித்த நாள் முதல்,
ஏதோ ஒரு சுமையையும் சுமக்கிறேன்
சுமை தெரியாமல்!
– பிரவீன் குமார் செ
- நிலமும்
நீயும்
ஒன்றேயடி.
என் ஜீவனை சுமப்பதால்!
- நீரும்
நீயும்
ஒன்றேயடி.
ஆழம் தெரியவில்லை!
- காற்றும்
நீயும்
ஒன்றேயடி.
உரசும் போது சிலிர்த்து விடுகிறேன்!
- வானும்
நீயும்
ஒன்றேயடி.
முதலும் முடிவும் தெரிவதில்லை !
- நெருப்பும்
நீயும்
ஒன்றேயடி.
கண்களால் தொடமுடிந்தும் …..
கைகளால் முடியவில்லை!!!
– பிரவீன் குமார் செ
- உன்னை நினைக்கும் போதெல்லாம்
என் நினைவுகள்
நினைவிழக்கிறது!
- உறங்கச்சென்றால்
கண்கள்
ஒத்துழையாமை செய்கிறது!
- உண்ணசென்றால்
வயிறு
உண்ணாவிரதம் மேற்கொள்கிறது!
- மூளை
மூலைக்கு மூலை இயங்க மறுக்கிறது,
வேளைக்கு வேளை வேலை நிறுத்தம் செய்கிறது!
- மொத்தத்தில்,
உன்னால்
என் உடலே கலவரமாக காட்சியளிக்கிறது!
- ஒவ்வொருமுறையும்,
கண்ணீர் புகையை வீசியே
இந்த கலவரத்தை அடக்குகிறேன்.
- ஆம்.
கண்ணீரோடு
என் நுரையீரலில் புகையை வீசியே!!!
– பிரவீன் குமார் செ