புதிதாய் பிறந்த குழந்தை சில மாதங்களில் கவிழ்த்து, பிறகு தவழ்ந்து, மெல்ல மெல்ல தன் பாதத்தை எட்டி வைத்து நடை பயிலும் அந்த தருணத்தை காணக்கிடைக்கும் அதன் தாய்க்கு வரும் உணர்வு தான் இந்த பதிவில் எனக்கும். டிசம்பர் 17, 2008 இல் பிறந்த இந்த சுவடுகள் எனும் என் குழந்தை, இப்பதிவின் மூலம் தன் ஐம்பதாவது பாதசுவடை இணையத்தில் பதிக்கிறது.
என் வாழ்க்கை பயணத்தில் நான் காண்பதையும், ரசிப்பதையும், அறிந்து கொள்வதையும், படைப்பதையும் பதிக்கவே இந்த சுவடுகள் எனும் வலைப்பூ என்னில் சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரசவித்தது. இக்கால இடைவெளியில் வெறும் ஐம்பது பதிவென்பது நிச்சயம் சாதனையல்ல. ஆனால் வேலை பளு காரணமாக எழுதுவதில் பல முறை தொய்வு இருந்தும் இப்பதிவின் தொடர் வாசகர்கள் மற்றும் விருந்தினர்கள் தங்கள் கமென்ட் மூலமும், மின்னஞ்சல் வாயிலாகவும், செல்பெசியிலும், சாட்டில் பேசியும் தந்த உற்சாகத்தால் தான் நிச்சயம் இது சாத்தியப்பட்டது.
இத்தருணத்தில் இவ்வலைப்பூவை பற்றிய சில சுவையான தகவல்களையும் பகிர்ந்து கொள்ளவும், என்னை எழுத ஊக்குவிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதத்தில் இந்த ஐம்பதாவது பதிவை எழுதுகிறேன்.
இதுவரை இவ்வலைத்தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட முதல் ஐந்து பதிவுகள்
1, எந்திரன் திரைப்படம் இலவச டவுன்லோட்- இணையத்தில் முதல் முறையாய் (10,000+ பார்வைகள்)
இந்த பதிவு வெறும் விளையாட்டிற்காக பதிவிக்கப்பட்டு Viral Marketing எனும் யுக்தி மூலம் பிரபலபடுத்தப்பட்டு வெறும் இரண்டே நாட்களில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை திரட்டியது. மூன்றாவது நாள் மிக அதிக பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் வலைத்தளம் சரிவர இயங்காமல் போகும் அபாயம் ஏற்பட்டு அந்த பதிவையே நான் தற்காலிகமாக நீக்கும் அளவிற்கு போய்விட்டது. இரண்டு மாதங்கள் கழித்து இதோ பத்து நாட்களுக்கு முன்பு தான் அந்த பதிவை அனைவரும் காணுமாறு மீண்டும் திறந்து வைத்துள்ளேன். வெறும் சில நாட்களிலேயே பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கவர்ந்து இழுத்தது என்னவென்று அந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள். நான் எழுதியதில் மிக அதிக கருத்துக்களையும் பெற்ற பதிவும் இதுதான். அனைத்தும் சுவாரிசமானவையும் கூட.
2, காதல் கவிதை – Tags
பதிவு எழுத ஆரம்பித்து சிறிது காலத்தில் தான் உணர்தேன், என் வலைத்தளத்தில் அதிகம் படிக்கப்படுவது நானெழுதிய காதல் கவிதைகளே. மிகவும் இது சந்தோஷமாக இருந்தாலும், என் கவிதைகள் பல களவாடப்பட்டு, முகப்புத்தகத்திலும், சில வலைத்தளங்களிலும் என் அனுமதி இல்லாமல் உலா வந்து கொண்டிருக்கிறது. என் பெயரோ என் வலைத்தளத்தில் சுட்டியோ கூட வழங்கப்படவில்லை. என்ன செய்ய? அது மட்டுமில்லாமல் என் கவிதைகளை படித்த பலர் என்னில் சாட்டிலும், மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்டு என் கவிதைகளை மேற்கோளிட்டு, தாங்கள் விரும்பியவற்றை ஆழமாக விமர்சனம் செய்து பின் தங்கள் காதல் தோல்வி கதைகளை கொட்டிதீர்த்து சென்றனர். இதை என்னன்னு சொல்ல?
3, என்னை பற்றி
என்னுடைய இந்த வலைத்தளத்தில், “என்னை பற்றி” என்ற பக்கம் அதிகம் பார்வையிடபட்டுள்ளது என்பது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை என கருதுகிறேன். ஆனால் அதை ஆச்சர்ய பக்கமாக எண்ணி முகம் தெரியாத பலர் என்னை வாழ்த்தி மின்னஞ்சல் அனுப்பியது தான் ஆச்சர்யம். அனைவருக்கும் நன்றியை தவிர பதில் அனுப்ப என்னிடம் வேறு ஒன்றும் இல்லை.
4, சுறா விமர்சனம் – சொந்த காசில் சூனியம்
நானெழுதிய சினிமா விமர்சனத்தில் அதிகம் பேர் பாரட்டியது இதுவே. இது கண்டிப்பாக ஒரு சிறந்த விமர்சனம் இல்லை, சொல்லிக்கொள்ளும்படியாகவும் அதில் ஒன்றும் ஆழமாக இல்லை. இருந்தாலும் வித்தியாசமாகவும் ரசிக்கும்படியாக இருந்தது என்று அனைவரும் கூறியதால் அதே நடையுடன் விமர்சனங்கள் எழுத முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்.
5, அன்புள்ள அப்பாவிற்கு.. மகளின் உருக்கமான கடிதம்..
இது நான் படித்ததில் பிடித்தது. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்தது மட்டுமே என் வேலை. ஆனால் கலகலப்பான ஒரு சிறுகதை. கொஞ்சம் ஒரு தனி நடையில் எழுத முயற்சித்தேன் அவ்வளவே.
இதுவரை நான் எழுதியதிலே அதிக நேரம் செலவிட்டு, அதிக சிரத்தை எடுத்து எழுதிய பதிவு இரண்டு இருக்கிறது. ஸ்.. ஸப்பா. எழுதுவதையே கொஞ்சம் நாளைக்கு விட்டுடலாம் என் என்னை போட்டு எடுத்துவிட்டது. நான் ஒரு எழுத்தாளனில்லை, எழுத கொஞ்சம் நேரம் பிடிப்பேன் என்பது தான் எனக்கு பிரச்சனை…
இதோ அந்த இரண்டு பதிவுகள்
1. ரயில் பயணங்களில் – சென்னை பயணம் பாகம் ஒன்று
2. ஐயம் வேணுகோபால் ப்ரம் டைடல் பார்க் – சென்னை பயணம் பாகம் இரண்டு
இதுவரை அதிக கருத்துக்களை பதிவு செய்த முதல் ஐந்து நபர்கள் பெயர் கீழே.
1, லோகேஷ் தமிழ் செல்வன்
2, செல்வக்குமார்
3, கௌசல்யா
4, ராதிகா
5, யோகேஷ்
ஆரம்பத்தில் ஒவ்வொரு முறை பதிவிட்ட பின்பு “யாருமே இல்லாத கடையில் டீ ஆத்துறோம்” என்ற எண்ணம் எனக்குள் வரவிடாமல் தங்கள் கருத்துக்கள் பதிவு செய்து ஊக்குவித்த நல்லுள்ளங்கள் தான் மேலே. நீங்கள் அளித்த ஊக்கத்திற்கு மிக்க நன்றி நண்பர்களே… உங்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்.
அதிக பார்வையாளர்களை கொண்டு வந்து சேர்த்த முதல் ஐந்து காரணிகள்
1, கூகிள்
2, நேரடி பார்வையாளர்கள்
3, இன்டலி
4, முகப்புத்தகம்
5, ட்விட்டர்
இதில் முக்கியமாக நான் குறிப்பிட வேண்டியது ஒன்று இருக்கிறது. நான் உறங்கும் முன் ஏதேனும் ஒரு பதிவை எழுதிமுடித்தவுடன் இன்ட்லியில் சமர்பித்துவிட்டு உறங்கசென்றுவிடுவேன். மறுநாள் நான் எழும் முன்னரே போதுமான அளவுக்கு அதன் வாசகர்கள் அதற்கு ஓட்டளித்து என பதிவை ஒவ்வொருமுறையும் இன்ட்லியில் “பிரபலமான பதிவு” என்ற அந்தஸ்து கொடுத்து விடுவர். இதுவே அதிகம் என்னை எழுத தூண்டியத்தில் பெரும் பங்கு வகித்தது என்பதை மறுக்க முடியாது.
கூகிள் தான் என வலைதளத்தை பல புதிய பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்த்துக்கொண்டு இருக்கிறது.
இதோ அதில் முதல் ஐந்து அதிகம் பயன்படுத்தப்பட்ட “தேடு வார்த்தை” (Keywords)
1, காதல் கவிதைகள்
2, சுறா விமர்சனம்
3, மழை நீர் சேகரிப்பு
4, எந்திரன் விமர்சனம்
5, சுனாமி கவிதை
அதிக பார்வையாளர்கள் கொண்ட முதல் ஐந்து நாடுகள்
1, இந்தியா
2, இலங்கை
3, அமெரிக்கா
4, அரபு நாடு
5, சிங்கபூர்
மொத்த பதிவும் ஐம்பது – தொடர் வாசகர்களும் ஐம்பது!
ஐம்பது பதிவுகளை எழுதியதால் என்னவோ சரியாக இந்த நேரத்தில் மின்னஞ்சல் சந்தாதார்களின் எண்ணிக்கையும் ஐம்பது, சுவடுகள் முகப்புத்தக ரசிகர்களும் ஐம்பது மற்றும் கூகுள் நண்பர்களும் ஐம்பது சொச்சத்திலேயே தொடர்வது ஆச்சர்யமாக தான் இருக்கிறது.
கண்டிப்பாக இவ்வாசக நெஞ்கங்களுக்காக அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள் இனிமேல் நிறைய எழுத வேண்டும் என் எண்ணியுள்ளேன். இத்தளத்தின் நான் எழுதும் புதிய பதிவுகளை தொடர்ந்து நீங்களும் படிக்க வேண்டுமா? மேலே புகைப்படத்தில் உள்ள மூன்று அம்சங்களிலும் நீங்கள் இத்தளத்தை தொடர்ந்தால் புதிய பதிவுகள் உங்களை தேடியே வரும். இத்தளத்தின் வலப்பக்கத்தில் அதை நீங்கள் காணலாம்.
இதோ இந்த வலைப்பூவில் கடந்த இரு வருடங்களில் பதியப்பட்ட நாற்பத்தி ஒன்பது பதிவுகளையும் கீழே பட்டியலிட்டுள்ளேன். உங்களிடம் நான் கோருவது ஒன்றே ஒன்று தான். நீங்கள் இவ்வலைபதிவின் தொடர் வாசகராக இருப்பின் என்னுடைய சில கேள்விகளுக்கு ஓரிரு நிமிடங்கள் செலவு செய்து கருத்துக்கூற இயலுமா? புதிய பார்வையாளர்கள் கூட தாங்கள் கீழ உள்ள பட்டியலில் உள்ள பதிவுகளை படித்துவிட்டு பதில் சொல்லலாம்.
நாற்பத்தி ஒன்பது பதிவுகளின் முழு பட்டியல்
49. தாமஸ் அண்ணா என்கிற அஜயன் பாலா
48. ஒரு ஜல் புயல், நிறைய மழை, கொஞ்சம் தத்துவம்
47. இறந்த பின்னும் உயிர் வாழ்வதற்கு ஒரு அருமையான வழி
46. சேலம் ஜி.ஆர்.டீ. ஓட்டலில் ஒரு மாலை பொழுது
45. கையும் களவுமாக வீடியோவில் பிடிபட்ட பெண் இன்ஸ்பெக்டர்
44. சிறு கவிதைகள் – தொகுப்பு நான்கு
43. எந்திரன் விமர்சனம் – இளைஞர்களுக்கான கருத்துள்ள படம்
42. எந்திரன் திரைப்படம் இலவச டவுன்லோட்- இணையத்தில் முதல் முறையாய்
41. பாராட்டப்பட வேண்டிய முதல் கோவை பதிவர்கள் சந்திப்பு
40. சூப்பர் ஸ்டாரின் பக்தர்களுக்கு மட்டும்
39. சிரித்தே தொலைக்க வேண்டிய பாஸ் என்கிற பாஸ்கரன் – விமர்சனம்
38. ஐயம் வேணுகோபால் ப்ரம் டைடல் பார்க் – சென்னை பயணம் பாகம் இரண்டு
37. நடிகர் முரளியின் இதயம் இன்னும் சிறிது காலம் கழித்து நின்றிருக்கலாம்
36. ரயில் பயணங்களில் – சென்னை பயணம் பாகம் ஒன்று
35. சிறு (சினிமாக்) கவிதைகள் – தொகுப்பு மூன்று
34. நண்பா இதோ கூகிள் எனக்கு அனுப்பிய காசோலை
33. பெண் சிசுக்கொலை
32. ஜம்முனு ஜிம்முக்கு ஒரு ரவுண்டு
31. பஞ்சாயத்து பால்டாயில் குடிச்சிட்டான் – களவாணி விமர்சனம்
30. சிறு கவிதைகள் – தொகுப்பு இரண்டு
29. எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது அம்மா
28. வியக்க வைக்கும் அழகு குட்டி செல்லம்
27. சுறா விமர்சனம் – சொந்த காசில் சூனியம்
26. என் காதல் சொல்ல நேரமில்லை
25. சிறு கவிதைகள் – தொகுப்பு ஒன்று
24. என் பார்வையில் பையா திரைப்படம் – விமர்சனம்
23. என் பார்வையில் விண்ணைத்தாண்டி வருவாயா
22. உன்னை பார்த்த நாள் முதல்
21. நினைத்து நினைத்து பார்த்தேன்
20. பெண்ணும் ஐம்பூதமும்
19. உலக நாயகனும் மயிர்க்கூச்சரியும உலக நிகழ்வுகளும்
18. ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது
17. நீங்கள் ஒரு அக்மார்க் தமிழனா? இதோ ஒரு பரிசோதனை!!!
16. அராரிராரோ – ராம் திரைப்பட வீடியோ பாடல் என் குரலில்
15. காதல் யுத்தம்
14. எனக்காக பிராத்தனை செய் சகோதரா
13. அன்புள்ள அப்பாவிற்கு.. மகளின் உருக்கமான கடிதம்..
12. சேலத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டம்
11. நியூ யார்க் நகரம் – ஜில்லுனு ஒரு காதல் திரைப்பட வீடியோ பாடல் என் குரலில்
10. என் பார்வையில் அயன் திரைப்படம்.
9. போகாதே போகாதே – தீபாவளி திரைப்பட வீடியோ பாடல் – என் குரலில்
8. ஆஸ்கார் தமிழனின் எல்லா புகழும் இறைவனுக்கே
7. தமிழில் எழுத வாரீகளோ? தமிழில்..
6. என் பார்வையில் கஜினி தமிழும், கஜினி ஹிந்தியும்
5. கண்ணீர் இருப்பில்லை – சுனாமி கவிதை
4. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – 2009
3. நெஞ்சுக்குள் பெய்திடும், வாரணம் ஆயிரம் வீடியோ பாடல் – என் குரலில்
2. ஒ சாந்தி சாந்தி – வாரணம் ஆயிரம் வீடியோ பாடல் – என் குரலில்
1. மனிதமுயற்சி
இதோ உங்களுக்கு என் கேள்விகள்
1, கவிதைகள், பாடல்கள், தகவல்கள், சினிமா விமர்சனங்கள், அனுபவக்கதைகள் போன்ற பல்வகை பதிவுகள் காணக்கிடைக்கும் இத்தளத்தில் உங்களுக்கு பிடித்தது எந்த வகையான பதிவுகள்?
2, தொடர்ந்து எந்த வகையான பதிவுகளை நான் பதிவிக்க வேண்டுமென எண்ணுகிறீர்கள்? ஏன்?
3, இந்த நாற்பத்தி ஒன்பது பதிவுகளில் உங்களுக்கு பிடித்த பதிவுகள் எவை? (ஒன்றுக்கு மேற்பட்டதாக கூட இருக்கலாம்)
4, முழுப்பதிவாக இல்லாவிடிலும் ஒரு குறிப்பிட்ட பாடலோ, சிறு வாக்கியமோ, கவிதையோ, உங்களுக்கு பிடித்தவற்றை மேற்கோளிலிட்டால் மிக்க மகிழ்ச்சி.
5, இவ்வலைதளத்திலோ, என் எழுத்துகளிலோ, அல்லது பொதுவாகவோ ஏதேனும் குறை தென்பட்டால், அல்லது யோசனை ஏதேனும் இருந்தால் இத்தளத்தின் மேலே “தொடர்பு கொள்க” பகுதியில் எனக்கு எழுதி அனுப்பி வைக்கவும். மிகவும் வரவேற்கிறேன்.
நன்றி பார்வையாளர்களே, மிக்க நன்றி வாசகர்களே
எழுத நிறைய இருக்கிறது ஆனால் நான் இன்னமும் எழுதவே ஆரம்பிக்கவில்லை.. இதோ (எழுத்து) நடை பயின்று கொள்ள இன்னும் நூற்றுக்கணக்கான பாதச்சுவடுகளை பதிக்கும் ஆசையில் மீண்டும் என் குழந்தை தன் நடையை போடுகிறது. கீழே விழாமல் நீங்கள் அதை கடைசிவரை அதன் கரம் பிடித்து அழைத்துக்செல்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்… பயணம் தொடரும்……
தமிழ் திரட்டி உங்களுக்கான புதியத் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
இவன்
http://tamilthirati.corank.com/
விளையும் பயிர்…
Miga miga arummai. Valthuzhal.
வாழ்த்துக்கள் பிரவின். இந்த பதிவுகளை ஒவ்வொன்றாக போட்டு முடிக்கவே ரொம்ப நேரம் ஆகி இருக்குமே! 🙂
நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள். நீங்கள் என்ன related posts plugin பயன்படுத்துகிறீர்கள்?
வாழ்த்துக்கள்…..பதிவுகளின் எண்ணிக்கை குறைவு என்பதைவிட ஒவ்வொரு பதிவும் திருப்தியை எழுதியவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் கொடுக்கவேண்டும்….நான் படித்த உங்களின் பதிவுகள் எனக்கு அந்த நிறைவை கொடுத்தன…!
கவிதைகள் பிறரால் திருட படுகிறதா…? வருந்துகிறேன். இது பதிவுலகில் சகஜம் தான். என்ன செய்வது…
பதிவுகள் தொடரட்டும்…
நன்றி கிரி… உண்மை தான், இந்த பதிவிற்கும் கொஞ்சம் நிறைய மெனக்கெட வேண்டி இருந்தது. ஆனால் எழுதி முடித்துவிட்டு வரும் திருப்தி இருக்கிறதே… அந்த மனநிறைவிற்கு தான் எல்லாமே 🙂
நீங்கள் சொல்வது போல், நேரம் கிடைக்கும் போது ஒவ்வொரு நாளாக, கொஞ்சம் கொஞ்சமாக எழுதியே இம்மாதிரி பதிவுகளை வெளியிடுகிறேன்.
இதோ நீங்கள் கேட்ட அந்த பிளக்கின் http://mitcho.com/code/yarpp/
மிக்க மகிழ்ச்சி கௌசல்யா…. You made my day 🙂
பிரவீன், உங்கள் படிப்புகளில் இது என்னக்கு ரொம்ப பிடித்தது, இது பிடிக்கவில்லை என்று பிரிக்க முடியாது. ஒவ்வொன்றும் அருமை.
என் மனதை தொட்டது என்னவென்றால், நீங்கள் சொந்த குரலில் பாடும் பாட்டுக்களே. பாடுவது சுலபமில்லை. முதலில் நீங்கள் பாட்டை ரசிக்கணும், உங்கள் மனதில் பாட்டு பதியனும், அப்புறம் தான் பாடவே தோன்றும்.
அப்படி பாடும் பாட்டுக்கள் நம் மனதை இதமாக்கும் என்பதில் ஐயமில்லை.
பாட்டை ரசியுங்கள் – உங்கள் மனது இலகும்
பாட்டு பாடுங்கள் – உங்கள் வயது உங்களை அறியாமலே குறையும்.
உங்கள் குரலில் வரும் பாடலை ஆவலுடன் எதிர்பார்கிறேன். நன்றி
ரொம்ப நன்றி செல்வா…….. 🙂 சீக்கிரம் என் புதிய பாடலை பதிவு செய்து ரிலீஸ் பண்ண முயற்சிக்கிறேன்….
அருமையான தொகுப்பு.. பிரவீன்,
என்னை குறிப்பிட்டமைக்கு நன்றி.. ஆனால், என் நண்பர் படைப்பிற்கு வந்து பின்னூட்டம் இடுவது எனது கடமை..
முதலில் ஒருவருக்கு நெருக்கமானவர் தானே முந்திக்கொண்டு பாராட்ட வேண்டும்..
ஒரு சின்ன பாராட்டிற்கு தானே இந்த சின்ன மனது ஏங்கி கிடக்கு..
வாழ்க.. வளர்க உங்கள் வலைப்பூ..
நன்பேண்டா…. நன்றி லோகேஷ் 🙂