- உன்னை ரசித்த நாள் முதல்,
உன் உருவம் மனங்கண்டு
தனியே பேசுகிறேன்!
- உன்னில் மயங்கிய நாள் முதல்,
விளங்காத ஓர் உணர்வுக்கு
விளக்கம் தேடுகிறேன்!
- உன்னை காதலித்த நாள் முதல்,
ஏதோ ஒரு சுமையையும் சுமக்கிறேன்
சுமை தெரியாமல்!
– பிரவீன் குமார் செ
என் வாழ்க்கை பயணத்தின் பாதச்சுவடுகள்…
– பிரவீன் குமார் செ
அடடா..இத்தன நாள் இத படிக்காம விட்டுட்டேனே..அருமையா இருக்கு பிரதர்.
இந்த உணர்வை நானும் உணர்கிறன்
நன்றி கிருத்திகா….
கவிதா நல்லா இருக்கு!!!
பட் செல்வா ராகவா !!! நல்லா இருக்கு!!!
கீர்த்திகா கு மட்டும் ரிப்ளே பண்ணி இருக்க!!! லோகேஷ் கு ஏன்
பண்ண லா???
நான் இதை வன்மையாக கண்டிகுறேன்………..
இவன்
ஆண்கள் சம உரிமை அமைப்பு
அட.. இப்படி கூட கெளம்பிடாங்கப்பா 🙁 தெரியாம விட்டுட்டேன் சதீஷ்.. அனைவருக்கும் நன்றி…
நல்லவேளை தப்பிப்பிழைத்தது தமிழ்,
நீ ஒரு முழுமையான கவிஞன் ஆனதால்…..
தப்பிப்பிழைத்த தமிழில்
உன்னால் எமக்கு கிடைத்தது உன் கவிதை.,
நிற்க…
சுகமாய் சுமந்த சுமை இன்னும்
சுகமாய் சுமக்கப்படுகிறதா,,,
சுமக்கப்பட்டால் கண்களில் வருமே
ஆனந்த கண்ணீர்..
இல்லை எனில்,
“சுமைதாங்கியாய்” இருக்கிறாயா?
இறக்கிவைக்கப்பட்ட “சுமை” இதயமூலையில்
எப்போது கணக்கிறதோ..அப்போது
வலியால் வருமே ஒரு சொட்டு கண்ணீர்..
எனது இந்த தமிழ் தப்பிப்பிழைத்த தமிழா?…
அல்லது தப்புத்தமிழா??
யானறியேன்…பராபரமே!!!
மிக்க நன்றி சார்… அருமையான வரிகள்… காதல் கைகூடிய பிறகு சுமைகள் அனைத்தும் சுகமாகிறது. வலிகளுக்கு அது மருந்தாகிறது.:-)