தேடினேன்
தேடினேன்
நீண்ட நாட்களாய் தேடினேன்
கிடைக்கவில்லை!
தொலைந்த இடம்
தெரியவில்லை.
தொலைத்த இடம்
தெரியவில்லை.
அட
இதயம் கூடவா
திருட்டு போகும்!
ஆனால்
அதை திருடியது அவளென்றறிந்து
என் இதயம் திரும்பக்கேட்டேன்.
மறுத்துவிட்டாள்.
சரி,
என் இதயம் தான் கிடைக்கவில்லை,
அவள் இதயமாவது கிடைக்குமென்று
தேடினேன்.
தேடினேன்.
அதுவும்,
கிடைக்கவில்லை.
அடிப்பாவி!
உனக்கு இதயமே இல்லையா!
– பிரவீன் குமார் செ
நெஞ்சில் ஒரு முறை கை வைத்து சொல்லுங்கள், யாரிடம் உங்கள் இதயம் இருகிறதென்று. தொலைத்தால்தானே தேடுவதற்கு!!!
உங்கள் மனதை யாரோ திருடிவிட்டாள் என்பதை மட்டும் நான் அறிவேன்.. அவள் பெயர் என்ன?
செல்வா…. கவிதை சொன்னால் அனுபவிக்கணும், இப்படி ஆராயக்கூடாது. 🙂 கவிதை என்றால் வெறும் கற்பனை மட்டுமே.