பெண்ணே!
உன் செவியில் கேட்கிறதா?
உன் விரல் படாத பூக்களின்
மௌனக்கதறல்களை.
பெண்ணே!
உன் கண்ணில் தெரிகிறதா?
உன் பாதம்படாத மண்துகள்களின்
ஏக்கப்பெருமூச்சுகளை.
பெண்ணே!
உன் மனம் அறிகிறதா?
உன் ஸ்பரிசம் படாத காற்றின்
அழுகை அலைவரிசையை.
பெண்ணே!
உன் இதயம் புரிகிறதா?
உன் பார்வைபடாத என் ஜீவனின்
மரண அவஸ்தைகளை.
பெண்ணே!
உன் ஆறாம் அறிவு உணர்கிறதா?
உன்னால் ஏங்கும் என் தேகத்தின்
உயிர் கசிவுகளை!
– பிரவீன் குமார்
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html
நல்ல பதிவு…
நேரமிருந்தால் இதையும் வந்து பார்கலாமே…(chandhan-lakshmi.blogspot.com)
nice………
just come and see this chandhan-lakshmi.blogspot.com