சேலத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டம்

சமீபத்தில் சேலத்தில் யாரும் இப்படி ஒரு மழையை பார்த்து இருக்க முடியாதென்று நினைக்கிறன். இரண்டு நாட்களாக மாலை வேளைகளில் அனைத்து மக்களையும் அவர்கள் இருக்குமிடத்திலேயே சிறைபிடித்து வைத்துக்கொண்டது. வீட்டில் இருப்பவர்கள் வீட்டுக்குள்ளேயும், கடைக்கு சென்றவர்கள் கடைக்குள்ளேயும் சில மணி நேரம் முடங்கி கிடக்க வேண்டியதாயிற்று.

நேற்று மாலை நான் ஏர்டெல் அங்காடிக்கு சென்று இருந்ததால் அங்கேயே மாட்டிக்கொண்டேன்.. இல்லை… தப்பித்து கொண்டேன் என்றே சொல்லலாம்.   பேய்மழைனு சொல்லுவாங்களே. அது போல இது குட்டி சாத்தான் மழைன்னு நினைக்கிறன். இரண்டு மணி நேரமே பேய்ந்தாலும் ஒரு கலக்கு கலக்கிடுச்சு. மழை நிற்கும் வரை கண்ணாடி சுவர் வழியாக வெளியே பார்த்துக்கொண்டே நேரத்தை கடக்க வேண்டியதாயிற்று.

weather-picture-photo-mist-rain-salemபிறகு  தான் தெரிந்தது மழையின் தாக்கம் ..  தெரிஞ்சவங்க ஒருத்தங்க வீட்டு மாடி அறையில் பதிக்கப்பட்ட  ஆஸ்புஸ்தாஸ் சீட் பக்கத்துக்கு வீட்டுக்கு பறந்து போயிடிச்சாம்… இன்னொருத்தங்க மாடியில காயப்போட்டிருந்த துணி மணி எல்லாம் எங்க போச்சுனே தெரியலயாம். அடுத்தநாள் சிலது மட்டும் பக்கத்துக்கு தெருவில் கிடைத்ததாக தகவல். அப்போ மீதி? ”போலீசுல கம்ப்ளைன்ட் பண்ணுங்கோ மாமி.. கண்டுபிடிச்சு கொடுப்பாங்க..”

இது நடந்தது நேற்று.. . இன்னைக்கும் அதே மாதிரி சாயங்கால நேரம். ஆறு மணி அளவிலேயே இருட்டிடுச்சு..  பயங்கர  காற்று.. சரியாய் சொல்லனும்னா பி.சி.ஸ்ரீராம் படத்துல வர காட்சி மாதிரி இருந்துச்சு..  வெளியே போய் மாட்டிக்க கூடாதுன்னு  உள் மனசு சொல்லுது.. வீட்டில் வேற யாரும் இல்ல. கரண்ட் காட்டானால் மாட்டிக்குவமேனு நினைக்கறதுக்குள்ளே.. டப்… கரண்ட் போயுடுச்சு..

நான்.. என் லேப்டாப்.. இன்னும் சிறிது நொடியில் உயிரிழக்க போகும்  வைபை(Wi-Fi) இணைய தொடர்பு.. பீப்.. பீப்.. பீப்.  ஐந்து நிமிடம் “யுபிஎஸ்” கத்தி ஓய்ந்தது… இணையம் துண்டிக்கப்பட்டது. வீட்டிலேயே  தனிமைசிறை…  யாரும் இல்லையே என்ன செய்ய? வீடு வேறு ஒரே இருட்டாக இருக்கிறது. கதவை திறந்து வெளியே போகலாம் என்றால்,, ம்ம்ம்.. வெளியே கொஞ்ச நஞ்ச காற்றா? மழையை ரசிக்கலாம் என்று நினைத்தால் அதுவும் முடியவில்லையே..

ஆங். ஐடியா..    “ஒரு தேவதை பார்க்கும் நேரம் இது…” மெல்லிய சப்தத்தில் என் லாப்டாப்பில் இசைவித்தேன்.. கடந்த இரண்டு நாட்களாக நான் மிகவும் ரசித்து கேட்கும் வாமணன் திரைப்பட பாடல்.. இருள் சூழ்ந்த அறை.. தனிமை.. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த அந்த பாடல் இப்போது சற்று மேலும் மனதை வருடுகிறது..

நான் புதிதாக வாங்கிய என் கம்பியில்லா பிராட் பான்ட் இணைப்பு கருவியை(EV-DO Broadband Wireless Terminal)  லேப்டாப் பில் சொருகி இணையதொடர்பு  ஏற்படுத்திக்கொள்ள பார்த்தேன்.. கன மழையால் சிக்னல் சரியாக கிடைக்கவில்லை. என்ன செய்ய? இருட்டில் ஒவ்வொரு அறை ஜன்னலிலும் லாப்டாப்பை தூக்கிக்கொண்டு மெல்ல ஊர்ந்து ஊர்ந்து சென்றேன்.. விளக்கு வேறு பற்ற வைக்கவில்லை. ஒரே இருட்டு வேறு.   ஒரு  இடத்தில் மட்டும் கொஞ்சம் சிக்னல் கிடைத்தது.. சிறிய அளவில் ஜன்னலை திறந்து அருகிலேயே அமர்ந்து  இணையத்தொடர்பை ஏற்படுத்திக்கொண்டேன்..

பிறகு என்ன? என்னதான் மழை பெய்தாலும்.. கரண்ட் கட்டானாலும்.. டெக்னாலஜி இருக்கு மாமே.. டெக்னாலஜி..  மனதிற்குள்ளே சொல்லிகொண்டே  நான் என்னுடைய  ப்ரொஜெக்டை தொடர்ந்து செய்துக்கொண்டு இருந்தேன்.. சுமார் அரைமணி நேரம் இருக்கும்.  மழை தண்ணீரில் காலை வைத்தது போல் ஜில்லென்று இருந்தது.. நான் கண்டுகொள்ளவில்லை.. மேலும் சில நிமிடங்கள் சென்று இருந்த வேலையில் என் கால்சட்டையும் நனைந்தது போல் ஒரு உணர்வு.. குனிந்து பார்த்தால் ஒன்றும் தெரியவில்லை. அட என்னப்பா இது.. ஒன்றும் விளங்கவில்லையே.. கரண்ட் வரட்டும் பார்போம் என உள்மனது சொல்லியது…

கரண்ட் வந்தது.. ஆச்சர்யம் குறையாமல் கீழே குனிந்து பார்த்தேன். குட்டை போல் வீட்டின் ஒரு பகுதியே தண்ணீர் சேர்ந்துள்ளது.. ஆ.. ஆ .. எப்படி அது? மேல பார்த்தேன்.. கீழே பார்த்தேன்.. அட… கடவுளே.. இன்டர்நெட் சிக்னலுக்காக ஆர்வத்தில் ஜன்னலை சிறிது திறந்திருக்கிறேன்.. அது மெல்ல மெல்ல சத்தமில்லாமல் வீட்டை குளமாக்கிக்கொண்டு  இருந்திருக்கிறது.. ஹய்யோ பிரவீன்… இப்படி சொதபிட்டயேடா? கம்முனு நல்லபிள்ளையா தூங்கி இருக்கலாமேடா.. இப்போ பீல் பண்ணி என்ன பண்றது.

பின் குறிப்பு : இந்த இடுக்கை தலைப்பின் அர்த்தம் இப்போது புரியுமே… 🙂

7 thoughts on “சேலத்தில் மழை நீர் சேகரிப்பு திட்டம்”

  1. யப்போவ்.. சேலத்துல மழையா? சாமி அந்த வார்த்தைய கேட்கவே எனக்கு இங்க சில்லுங்குது.. சில்லு காத்து வாங்கி நாள் ஆச்சு சாமி.. சீக்கிரம் சேலம் வரணும்….:D

  2. ஹலோ பிரவீன் தம்பி உங்களோட ஆர்வ கோளாறுக்கு ஒரு அளவே கிடையாதா?

    இன்றைக்கும் மழை வரும் ஜாக்கிரதை.

  3. சீக்கிரம் வாங்க லோகேஷ்…. ரெண்டு பேரும் சேர்ந்து மழை நீர் சேமிக்கலாம்…
    ஹலோ சரவணன்.. ஒரு வாட்டி பட்டதே போதும்.. இனிமேல் ஜாக்கிரதையா இருப்போம்ல…

  4. athu eapdi boss…current poachu nu sonninga…appuram ups charge poachu nu sonninga..appuram eadpi song kettenga…oru devathai varum nearam idu nu….adadadada

  5. அடடடா தமிழ் கு அளவு இல்லாம போச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *