பெண் சிசுக்கொலை

பசித்தழுகிறது பச்சிளங்குழந்தை.
அறுந்து விழாத தொப்புள் கொடியை
பார்க்கும் கண்கள் சொல்லிவிடும்
புதியதாய் பிறந்த குழந்தையென்று.

அழுகுரல் கேட்டுணர்ந்து வந்த தாய்
குழந்தையை மடியினில் வைத்து
ஊட்டினாள் புட்டிப்பாலை.

பசியடங்கி படுத்துறங்கிய குழந்தையைக்கண்டு
கண்ணீரோடு கீழே ஊற்றினாள்
மீதமிருந்த கள்ளிப்பாலை.

உடையில்லா உடலைக்கண்டு
உடைந்த நெஞ்சம் சொல்லிவிடும்
கொல்லப்பட்டது பெண்பாலை!

13 thoughts on “பெண் சிசுக்கொலை”

  1. //உடையில்லா உடலைக்கண்டு
    உடைந்த நெஞ்சம் சொல்லிவிடும்
    கொல்லப்பட்டது பெண்பாலை!//

    அருமை.வா஝்த்துக்கள்

  2. நல்ல முயற்சி…மேலும் தொடர வாழ்த்துக்கள் .

  3. அற்புதமான கலங்கடிக்கும் வரிகள்…..மனம் கனக்கிறது…..இன்றுதான் உங்கள் தளம் பார்கிறேன், அருமை…..தொடர்ந்து அதிகமாக எழுதலாமே….

  4. @கௌசல்யா. தங்கள் வருகைக்கு வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி. 🙂 கண்டிப்பாக முடிந்தவரை நிறைய எழுதுகிறேன். உங்களை போன்றவர்களின் தூண்டுதலே என்னை மேலும் எழுத வைக்கிறது.

  5. kalanga vaitha வரிகள்..
    சிந்திக்க தூண்டிய karuthu..
    மேலும் கவிதைகள் படைக்க en idhayamarndha vazhthkal..

  6. மனதை கரைக்கும் அழுகுரல் ………………….கேட்கிறது இப்பாடலால்!!!!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *