நேற்று இரவு பையா திரைப்படம் இரவு காட்சிக்கு கே.எஸ். பிக் சினிமாஸ் தியேட்டருக்கு சென்றிருந்தோம். கவுண்டர் அருகே டிக்கெட் வாங்க சென்ற போது செக்யூரிட்டி “சார், தியேட்டர்ல ஏ.சி. வேலை செய்யாது. பேன் மட்டும் தான். காத்து சரியா வராது. ஓகேனா டிக்கெட் வாங்குங்க. இப்பவே சொல்லிட்டேன்”..(பார்க்க – http://twitter.com/praveenc85/status/11547200473).. ஸ்ஸ்ஸ்ஸ்… “அடடா, நான் ஏற்கனவே வெப் சைட்ல டிக்கெட் புக் பண்ணிட்டேங்க. கவுண்டர்ல அத காட்டி டிக்கெட் வாங்க வந்தேன். ஏ.சி என்ன ஆச்சு?”, நான். அதற்க்கு அவர் “அது என்னவோ தெரியல சார், புது படம் வந்தா ஏ.சி வேலை செய்ய மாட்டேங்குது!!! சொல்லாம டிக்கெட் கொடுத்துட்டா, உள்ள வந்து சத்தம் போடுவாங்க. அதான் என்ன கவுண்டர்ட நிக்க வச்சிட்டாங்க.” என்று சொல்லிவிட்டு எனக்கு பின்னாடி நின்ற ஒரு பெண்மணியிடம் “மேடம், தியேட்டர்ல ஏ.சி. வேலை செய்யாது. பேன் மட்டும் தான். காத்து சரியா வராது. ஓகேனா டிக்கெட் வாங்குங்க. இப்பவே சொல்லிட்டேன்” என்று தன் பணியை செய்துக்கொண்டு இருந்தார். சரி என்ன பண்றது? வாங்கி கொண்டு உள்ளே சென்றோம். உள்ளே நுழையவும், திரையில் எழுத்து போடவும் சரியாக இருந்தது.
சரி.. படத்துக்கு வருவோம். பையா எப்படி? உலக சினிமாவா? தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் படமா? ஒரு சிறந்த இலக்கிய படைப்பா? என்று நீங்கள் கேள்வி கேட்டால். சத்தியமாக கிடையாது. பக்கா மசாலா படம். பீமா தந்த தோல்வியை சரி கட்ட, லிங்கு மிகவும் கஷ்டப்பட்டு கலக்கிய ஒரு மசாலா கலவை. அவ்வளவே. தினமும் தயிர் சாதம், புளி சாதம், சாம்பார் சாப்பிடும் போது காரமா ஹைதராபாத் பிரியாணி பொட்டலத்தை பிரித்து வைத்து சாப்பிடற மாதிரியான ஒரு படம். நல்லா தான இருக்கும்? சரி கதை என்னன்னு கேடீங்கனா… “…………”… “………..”.. “….” அதெல்லாம் கேட்க கூடாது. தயாரிப்பாளரே டைரக்டர் லிங்குசாமியிடம் கேட்காத கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்கலாமா? நோ.. நோ. கேட்டாலும் யாருக்கும் தெரியாது. படத்த பார்த்து என்ஜாய் பண்ணிட்டு அவங்க அவங்க வேலைய பார்த்துட்டு போயிட்டே இருக்கனும். என்ஜோய்மென்ட் காரண்டீட். படத்தில் அந்த அளவிற்கு செலவு இல்லை. அனால் ஒவ்வொரு காட்சியிலும் லிங்குசாமியின் சிரத்தை தெரிகிறது. வெற்றி ஒன்றே அவரின் குறிக்கோள்.
படம் இப்படி தான் ஆரமிக்கிறது. பெருசா ஏதும் பில்டப் கொடுக்காமல், மிக சாதாரணமாக இன்ட்ரோ கொடுக்கிறார்கள் கார்த்திக்கிற்கு. நண்பர்கள் அனைவரும் பஸ்ஸில் வெயிட் பண்ண, பஸ்சு கிளம்பும்போது தான் வருவேன்னு வெயிட் பண்ணி ஓடி வந்து ஏறுகிறார் கார்த்திக். கார்திக்கை பார்த்தவுடன் தியட்டரில் ஒரே விசில் கைதட்டல். பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன் கொடுத்த பெயர். மூன்றாவது படத்திலேயே நிறைய ரசிகர்களை சம்பாதித்து விட்டார். நல்ல வேலை அதுக்காக பெருசா பில்ட் அப் ஏதும் கொடுத்து ஒரு இமேஜ் உருவாக்க முயற்சி பண்ணல. பஸ்சில் இருந்து இறங்கும் போது தமன்னாவை பார்க்கிறார் கார்த்திக். பார்த்தவுடன் காதல் தீ பற்றிக்கொள்கிறது!!! ஒரு மாதிரி முழிக்கிறார் தமன்னாவை பார்த்து. கார்த்திக் ரியாக்சன் சூப்பர். அதன் பின் வரும் காட்சிகளில் அவர் உள்ளே நுழையும் இடம் எல்லாம் தமன்னா அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார். படம் மிக பொறுமையாக தொடக்கத்தில் நகர்கிறது. கார்த்திக்கின் காரில் தமன்னா ஏறியவுடன் தான் படம் டாப் கியரில் சீறுகிறது. அனல் பறக்கிறது.
படத்தில் முக்கியமாக மூன்றே கதாபாத்திரம் தான். ஒன்று கார்த்திக், மற்றொன்று தமன்னா அப்புறம் மூன்றாவதாக முக்கிய பாத்திரத்தில் அந்த கருப்பு கார். சும்மா பூந்து விளையாடி இருக்கு படத்துல. படம் பார்த்தா தான் உங்களுக்கு தெரியும். கார் நடிச்சி இருக்குன்னு நான் சொன்னா நம்பவா போறீங்க? படம் முழுக்க வரும். பெங்களூர் டு மும்பை தமன்னாவும் கார்த்திக்கும் காரிலேயே போவாங்க. அது தான் முழு படமும். (சாரி கஷ்டப்பட்டு வருச கணக்குல லிங்கு அண்ட் டீம் யோசிச்சு உருவாக்கின கதைய நான் தெரியாம சொல்லிட்டேன்!).
கார்த்திக்கை பத்தி சொல்லியே ஆகணும். எப்ப பார்த்தாலும் சூவிங்கம் மென்று கொண்டிருக்கிறார் மனுஷன். இந்த படத்துல அவர் பேர் சிவா. ரன் ஞாபகம் இருக்கா? அதுல மாதவன் பெரும் சிவா தான். லிங்குசாமியின் செண்டிமெண்ட் போலும். சரி இருந்துட்டு போவுது.. நல்ல தான் இருக்கு. கார்த்திக் பயங்கர மான்லியா இருக்கார். இத நான் சொல்லியே ஆகணும். பருத்தி வீரனில் வெறும் அர டிராயர், ஏத்தி கட்டின லுங்கி. ஆயிரத்தில் ஒருவனில் ஒரே ஒரு லங்கோடு. ஆனா இதுல நல்ல முன்னேற்றம். கலர் கலரா டீ-ஷர்ட், ஜீன்ஸ். தப்பிச்சிட்டார். அனாயசமா சிரிக்கிறார். டான்ஸ் ஆடுகிறார். சண்டை போடுகிறார். நிறைய இடத்தில சூர்யா மாதிரியே இருக்கார். கண்டிப்பா குரல் ஒற்றுமை. அதுவும் முக்கியமா தமன்னாவை பாம்பேல அவங்க சொந்தகாரங்க வீட்ல விட்டுட்டு கார்ல போகும் போது அவர் நண்பரிடம் போனில் சோகத்தின் உச்சத்தில் குரலை கரகரவென பேசுவார். சான்சே இல்ல. சூர்யா தான் டப்பிங் கொடுதிருக்கார்னு தோணும். இது தவிக்க இயலாது. சொந்த தம்பி. அதனால் உயமான சூர்யானு வேணா இவற சொல்லலாம்.
பொதுவாக எனக்கு சண்டை காட்சிகள் பிடிக்காது. அதுவும் முக்கியமா விஜய் படத்துல வர மாதிரி. பறந்து பறந்து.. பாய்ஞ்சு பாய்ஞ்சு பத்து பேர ஒரே அடில அடிக்கிறது எரிச்சலா இருக்கும். ஆனா இந்த படத்துல சண்டை காட்சிகள் உண்மையாலுமே பிரமிக்க வைக்கிறது. ஒரே அடி. ஆனா பவர்புல் அடி. எதிரி காலி. அப்படியே சுருண்டு விழுந்துடறாங்க. ஜஸ்ட சாம்பிள். ஒருத்தர தூக்கி, மடில வச்சி, அப்படியே மடக்கி விசுருகிறார் கார்த்திக். பயங்கரமா இருக்கு திரையில் பார்பதற்கு. (நான் இன்னொரு முறை இந்த படத்திற்கு போனாலும் ஆச்சர்யமில்லை) இந்த படத்திற்கு பிறகு கண்டிப்பா அவருக்குனு தனி இடம் முன்னணி நடிகர்கள் வரிசையில் தமிழ் சினிமாவில் இருக்கு. சூர்யா ஜாக்கிரதை!.
நயன்தாராவுக்கு படமில்லை. திரிசாவிக்கு மார்கெட் இல்லை. அசின் மும்பைக்கு போய்விட்டு விளம்பர படத்திலாவது பிசியாக இருக்கிறார். அதானாலேயே இப்போது தமன்னாவை தவிர தமிழிற்கு வேறு ஆள் இல்லை. அவங்க காட்டுல “அடடா மழைடா அட மழைடா”. சூர்யா, கார்த்திக், விஜய்ன்னு அவங்க மார்கெட் சர்ருன்னு எரிகிட்டு இருக்கு. இந்த படத்தில் கார்த்திக்கிற்கு சரியான ஜோடி. முதல் படத்தில் முத்தழகு கிடைக்கவில்லை. இரண்டாம் படத்தில் ஜோடியே இல்லை. அந்த குறையை இந்த படத்தில் நீக்கி விட்டார். தமன்னா இந்த படத்துல பிரிட்ஜ்ல இருந்த எடுத்த ஆப்ளில் பலம் போல ப்ரெஷா இருக்காங்க.(உவமை எப்புடி?). ஒரு பக்கம் கார்த்திக் சண்டைக்காட்சிகளில் வில்லன்களை தோலுரித்துக் கொண்டிருக்கையில். லிங்குசாமி பாடல் காட்சிகளில் தமன்னாவை துகிலுரித்து விட்டு இருக்கிறார். அதனால தானோ என்னோவோ தியேட்டர்ல ஏ.சி வேலை செய்யாட்டி கூட யாருக்கும் வியர்க்கவில்லை போலும். ஹி ஹீ.
அப்புறம் அயன் படத்துல தமன்னாவுக்கு அண்ணனாக ஒருத்தர் வருவாரே – ஜெகன். அவர் இதிலேயும் கார்த்திக்கிற்கு நண்பனாக வருகிறார். அதுல சூர்யாவிற்கு நண்பர். தமன்னா ஹீரோயின். இதுலேயும் தமன்னாதான் ஹீரோயின், கார்த்திக்கிற்கு நண்பர். நல்ல செண்டிமெண்ட். வெற்றி சூத்திரமோ? ஆனா இதுல பட்டாசு கேளப்பிட்டார். அவர் வர சீன்ல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கிறது. அதுவும் மாறு வேஷத்துல பைக்கில போகும் போது கார்த்திக் கண்ணுல மாட்டிக்குவாரே.. நல்ல காமடி. வடிவேல் நடிச்சி இருந்தா இன்னும் சூப்பரா இருந்து இருக்கும்னு நெனைக்கிறேன். ஆனால் இவரும் அருமையான நடிப்பு.
படத்துல யுவன் ஷங்கர் ராஜாவை பற்றி நான் சொல்லாமல் விட்டுவிட்டால் நான் இந்த விமர்சனத்தை எழுதுவதில் அர்த்தமே இல்லை. பாடல்களிர்க்காக தான் இரண்டாம் நாளே படத்திற்கு சென்றேன். நீண்ட நாட்களிற்கு பிறகு தன் ரசிகர்களுக்கு விருந்து படைத்து இருக்கிறார் யூவன். ஒவ்வொரு பாடல்களும் தேன். முக்கியமாக. “என் காதல் சொல்ல நேரமில்லை”, “அடா மழைடா அட மழைடா”, “துளி துளி துளி மழையாய் வந்தாளே”. சூப்பர். என்னோட பேவரெட். நடு இரவில் இப்போது இந்த விமர்சனம் எழுதும் போதும் பின்னணியில் அந்த பாடல்கள் தான் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. சொன்னால் நம்ப மாட்டீர்கள், “பூங்காற்றே பூங்காற்றே” பாடல் முதன் முதலாக கேட்டதில் இருந்து எனக்கு பஸ்சிலோ காரிலோ பயணம் செய்யும் போது பின்னணியில் கேட்க்கும் பாடல் போல தோன்றியது. படத்தில் தமன்னாவும் கார்த்திக்கும் காரில் போகும் போது பின்னணயில் அதன் பாடல் வரும். யூவன் இஸ் ஜீனியஸ். ஆனால் படம் வருவதற்கு முன்பு இந்த பாடல்கள் அனைத்தும் காரணமே இல்லாமல் எனக்கு சண்டைக்கோழியையும் விஷால் முகத்தையும் இத்தனை நாள் எனக்கு ஞாபகபடுத்திகொண்டு இருந்தன. இந்த படம் பார்த்த பிறகும் தான் எனக்கு விஷால் முகம் மறைத்து கார்த்திக் முகம் வந்தது!!! நா.முத்துக்குமார் எழுத்துக்களை பாராட்ட வார்த்தை இல்லை. ஆனால் மனிதர் “தேவதை”, “ஏஞ்சல்” போன்ற வார்த்தைகளை மறக்கமால் தன் காதல் பாடல்களில் சேர்த்து விடுகிறார். பட் வீ லைக் இட்.
படம் நிறைய இடத்துல சண்டைகோழி, கில்லி, ரன் போன்ற படங்களை ஞாபக படுத்துகிறது. இரவில் கார் துரத்தும் காட்சி ஒன்று வரும். அது பகலில் இருட்டை போன்ற தோற்றத்தை உருவாக்கும் லென்ஸ் போட்டு எடுத்து இருப்பார்கள். அது இல்லை பிரச்சனை. அனால் அந்த கார்களில் ஒளிரும் ஹெட் லைட் கிராபிக்ஸ் வேலை என்று நன்றாக தெரிகிறது. ரோடு ராஷ் கம்ப்யூட்டர் கேமில் நைட் மோடில் விளையாடுவதை போல இருந்தது. இந்த மாதிரி படங்களில் படத்தில் லாஜிக் என்று ஒன்றை எக்காரணம் கொண்டு பார்க்க கூடாது என்று நமக்கு புரிகிறது. நிறைய இடத்தில பிரச்சனை வரும். ஆனால் அதையும் மீறி படம் ஜெட் வேகத்தில் பயணம் செய்வதால் படம் முடிவதே தெரியவில்லை.காரில் இந்த படத்திற்கு காரில் போய்விட்டு வருபவர் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதை. வரும் போது கண்டிப்பாக உங்களை அறியாமல் கார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும். சர்ர் என்று U டர்ன் போட வைக்க தோணும்…
நீங்கள் இந்த படத்தை பார்த்து விட்டீர்களா? இல்லை பார்க்க போகிறீர்களா? சும்மா உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள். அட நம்புங்க காசுலாம் இல்ல. ப்ரீ தான் 🙂
a good advt to paiya! have u receive cheque for this… from producer… any way keep it up வ்வ்வ்வ்வ்வ்
பணம்லாம் ஒன்னும் வாங்கல பாஸ். சும்மா ஒரு இலவச விளம்பரம் தான். ஹ ஹா…
பிரவீன்,
படத்தின் முதற்கட்ட தயாரிப்பாளர் லிங்குசாமி தான்.. திருப்பதி பிரதர்ஸ் அவரோட கம்பெனி தான்..
அப்புறம் ஜெகன் விஜய் டி வீ ல ரொம்ப பிரபலம்.. அவருக்கு அறிமுகம் தேவையில்லை.. கொஞ்சன் காட்சில வந்தாலும்.. ரொம்ப சூப் நடிப்பு..
படம் நீங்க சொன்ன மாறி.. பக்கா கமர்சியல்..
காா்த்திக்குக்கு friendஆ நீங்க!
லோகேஷ், என்ன U டர்ன்லாம் போட்டீங்களா? கார் எவ்ளோ வேகத்துல வீட்டுக்கு திரும்பி
வந்துச்சு?
பாலா… எனக்கு பக்கத்துக்கு வீட்ல கார்திக்னு ஒரு பிரண்டு இருக்கிறார். அவர தான கேட்கறீங்க? 🙂
Praveen…..I will plan this weekend to watch this movie.. I liked your comments. I will watch and update the movie comments here…
Thanks
I hav got a terreble experiance at K.S (Big Cinemas) on the last Sunday (1-aug-2010), (when we went to “Thillalangadi” to celebrate friends day). we choose to go to matinee since we have had plans for the evening. so one of our friend went there to book the tickets at around 12 noon. by the time of booking it self the security gaurd told that the “A C” is not functioning. but alternative fan arrange ments were made. we have not taken that seriously. and booked our tickets. we were told of the show time as 2.45 PM. we sharply entered the premises 2.45 PM and found that picture has been started and running for 10 Minutes, what we saw at the theater was shoking, only 1st class tickets only (only center block only filled) pedastal fans were planted on the center ways (one each on each side of a row). when we are searching for our seats (‘F’ row) one of our friend (sekar) just went little near to the pedestal fan. (these fans are rented one) The sharp Blades in the fan hit his head (the leaf guard was found damaged) . the wound was so deep that 8 stitching we done on the wound, being Sunday afternoon no medical help was available immediately, blood was coming out of the wound like fountain. Two scarf were fully soaked in blood. Until the show is over the management is not even ready to atleast remove the fan from the place. KS once a famous theatre become very worst.
விமல், கேட்பதற்கே கஷ்டமாக இருக்கிறது… கே.எஸ் இவ்வளவு மோசமாகி விட்டதே. உங்கள் நண்பர் இப்பொழுது நலமென நம்புகிறேன்.
நல்லா இருக்கு
film is very super, but your commends very nice.
super film in the south industry is paaiya , super film