ஒரு நாளில் வாழ்க்கை – புதுப்பேட்டை பட பாடல் என் குரலில்

நான் உடைந்து போகும் நேரம் எல்லாம் அடிக்கடி கேட்க்கும் பாடல் இது. செல்வராகவன் வரிகளில், யுவனின் இசையிலும் குரலிலும் மனதை உருக்கும் இந்த பாடல் என்னுடைய ஆல் டைம் பேவரிட். இதோ என் குரலில் ஒரு முயற்சி.

ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்
ஓஓஓஓஓஓ, கரு வாசல் தொட்டு வந்த நாள் தொட்டு
ஓஓஓஓஓஓ, ஒரு வாசல் தேடியே விளையாட்டு
ஓஓஓஓஓஓ, கண் திறந்து பார்த்தால் பல கூத்து
ஓஓஓஓஓஓ, கண் மூடிக்கொண்டால்
ஓஓஓஓஓஓ …

போர்களத்தில் பிறந்துவிட்டோம், வந்தவை போனவை வருத்தமில்லை
காட்டினிலே வாழ்கின்றோம், முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை
இருட்டினிலே நீ நடக்கயிலே உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே உனக்கு துணை என்று விளங்கிவிடும்
தீயோடு போகும் வரையில், தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து,கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட ஏறி நின்று போர் தொடுப்போம்
ஓஓஓஓஓஓ, அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
ஓஓஓஓஓஓ, இங்கு எதுவும் நிலையில்லை கரைகிறதே
ஓஓஓஓஓஓ, மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே
ஓஓஓஓஓஓ, அந்த கடவுளை கண்டால்
ஓஓஓஓஓஓ …

அது எனக்கு இது உனக்கு இதயங்கள் போடும் தனிக்கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு உடல்களும் போடும் புதிர்க்கணக்கு
உனக்குமில்லை இது எனக்குமில்லை, படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்
நல்லவன் யார், அட கெட்டவன் யார், கடைசியில் அவனே முடிவு செய்வான்
பழி போடும் உலகம் இங்கே,பலியான உயிர்கள் எங்கே
உலகத்தின் ஓரம் நின்று அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை
நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம்
ஓஓஓஓஓஓ, பல முகங்கள் வேண்டும் சரி மாட்டிக்கொள்வோம்,
ஓஓஓஓஓஓ, பல திருப்பம் தெரியும் அதில் திரும்பிக்கொள்வோம்,
ஓஓஓஓஓஓ, கதை முடியும் போக்கில் அதை முடித்துக்கொள்வோம்,
ஓஓஓஓஓஓ, மறு பிறவி வேண்டுமா
ஓஓஓஓஓஓ …

2 thoughts on “ஒரு நாளில் வாழ்க்கை – புதுப்பேட்டை பட பாடல் என் குரலில்”

  1. உங்களுக்குள்ள ஒரு டைரக்டர்,படத்தொகுப்பாளர்,பின்னணி பாடகர் எல்லாரும் இருக்காங்க பாஸ்…நிஜ பாட்டுக்கும்,நீங்க பாடின பாட்டுக்கும் வித்தியாசமே தெரியல…நீங்க பாட்டுக்கு இது மாதிரி நிறைய பாடி வலையேற்றுங்கள்.ரசிக்க நாங்க இருக்கோம். 🙂

  2. மிக்க நன்றி தேவா! 🙂 நிச்சயம் மற்றொறு நல்ல பாடல் விரைவில்… அதுவரை முடிந்தால் மற்ற பாடலையும் கேளுங்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *