நிலவும் அழகுதான்
அண்ணாந்து பார்த்து
ரசிக்குமளவிற்கு.
பார்த்தால் பக்கம்தான்
நிஜமோ,
தொடக்கைகள் நீண்டும்
தொட்டுவிடா தொலைவிற்கு.
தனிமையான இரவுப்பொழுதில்,
நிலவே
துணையாகிறது.
கண்கள் காணக்கிடைத்தும்,
சொந்தமில்லை என்பதே
நிஜமாகிறது.
உன்னை நிலவென்று ஒருமுறை
கவிதை எழுதினேனே,
இப்போது புரிகிறது
நீ நிலவுதான்!
நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.
ஹ்ம்ம் சுபெர்ர்………….tamil varaa maatanguthu…super kavithai….
நன்றி திருமலை
நன்றி ரத்தினவேல்