மூன்று நாட்களுக்கு முன்னர் இந்திய மருத்துவ சங்கம், சேலம் கிளையில் நான் ஆன்ட்ராய்ட் பற்றி பேசியதை ஏற்கனவே எழுதி இருந்தேன். அதற்காக தயார் செய்த அந்த பவர்பாய்ன்ட் பிரசன்டேசனையும் அதில் பகிர்ந்திருந்தேன். அதை பகிருவதற்க்காக “ஸ்லைட் ஷேர்” என்னும் தளத்தில் அதை பதிவேற்றினேன். “ஸ்லைட் ஷேர்” என்பது பவர்பாய்ன்ட் பிரசன்டேசனை இணையத்தில் பகிருவதற்கு முதன்மையான இணையத்தளம்.உலகெங்கும் பலரால் பதிவேற்றப்பட்ட பல வகையான கோப்புகளை அங்கு காணலாம். நான் அதில் என்னுடையதை பதிவேற்றிய மறுநாள் காலை அவர்களிடம் இருந்து ஒரு மின்னஞ்சல். அந்த பிரசன்டேசன் முகப்புதகத்தில் பிரபலாமகி இருக்கிறது என்றும். அவர்களுடைய இணையதள முகப்பில் அதை பிரசுரித்து இருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்கள். மகிழ்ச்சி!
வெரி குட்