- உன்னை நினைக்கும் போதெல்லாம்
என் நினைவுகள்
நினைவிழக்கிறது!
- உறங்கச்சென்றால்
கண்கள்
ஒத்துழையாமை செய்கிறது!
- உண்ணசென்றால்
வயிறு
உண்ணாவிரதம் மேற்கொள்கிறது!
- மூளை
மூலைக்கு மூலை இயங்க மறுக்கிறது,
வேளைக்கு வேளை வேலை நிறுத்தம் செய்கிறது!
- மொத்தத்தில்,
உன்னால்
என் உடலே கலவரமாக காட்சியளிக்கிறது!
- ஒவ்வொருமுறையும்,
கண்ணீர் புகையை வீசியே
இந்த கலவரத்தை அடக்குகிறேன்.
- ஆம்.
கண்ணீரோடு
என் நுரையீரலில் புகையை வீசியே!!!
– பிரவீன் குமார் செ
Good..Keep it up! seems to be self Experience..!!!!
அருமை அற்புதம்
ரொம்ப நல்ல இருக்கு. பாவம் உங்க காதலி ரொம்ப smoke பண்ணாதிங்க
விருப்பங்களை சொல்லி தெளிவு பெறுங்கள் _புகைத்து தள்ளாதீர்கள்