நடிகர் கமல்ஹாசனின் ஐம்பது வருட சினிமா வாழ்க்கை ஒரு புறம் கொண்டாடபட்டுக்கொண்டு இருக்கையில் அவரை பற்றிய வேறு சில சம்பவங்கள் என் மின்னஞ்சலிலும் குறுந்தகவலிலும் வந்தது. இதுவரை யாரும் யோசித்திடாத(குறைந்தபட்சம் நான்), எதிலும் பதிக்கப்படாத மயிர்க்குசெறியும் சம்பவமாக அது இருந்தது. அந்த கருத்துக்கள் மற்றவருக்கு கொஞ்சம் புதிராக இருக்கலாம், அமானுஷ்யமாக இருக்கலாம், ஏன் சிலருக்கு சிரிப்பாகவும் இருக்கலாம். அவருடைய சினிமாக்களும் நிஜ உலக சம்பவங்களும் முடிக்கப்பட்டது போல் ஒரு தோற்றம் அளித்தது அந்த தகவல்.
இதோ உங்களையும் குழப்ப அது என்னவென்று பார்ப்போம்.
1978, கமலின் சிகப்பு ரோஜாக்கள் வெளிவந்தது. அவருடைய கதாபாத்திரம் பெண்களை கொல்லும் ஒரு மனநோயாளியாக இருந்தது…
>> அடுத்த வருடம் சைக்கோ ராமன் என்பவன் போலீசில் பிடிபட்டான். நிறைய பேர்களை மூர்க்கமாக கொன்றதே அவன் செய்த குற்றம், குறிப்பாக பெண்களை…
1788 ஆம் வருடம் வேலையில்லா திண்டாட்டத்தை சித்தரிக்கும் படமாக சத்யா வெளிவந்தது.
>>அடுத்த இரண்டு வருடம் கழித்து இந்தியாவில் வேலையில்லா திண்டாடம் தலை விரித்து ஆடியது.
பார்க்க: http://en.wikipedia.org/wiki/Poverty_in_India
1992 ஆம் வருடம் தேவர் மகன் என்ற திரைப்படம் வெளிவந்து சக்கை போடு போட்டது. சமூகத்தில் நடக்கும் சாதி சண்டையை மையப்படுத்தி இருந்தது அந்த திரைபடத்தின் கதை.
>>அடுத்தத் வருடம் தென் தமிழக மாவட்டங்களில் சாதிகலவரங்கள் வெடித்து வரலாற்றில் பதிவாகி உள்ளது.
சுமார் 1996 ஆம் வருடம் நடந்த தொடர் நிதி நிறுவன மோசடிகளால் பொது மக்கள் பெருமளவில் ஏமாற்றப்பட்டது அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க முடியாது. >>அதற்கு ஓரிரு வருடங்களுக்கு முன்பாகவே வருடம் வெளிவந்த மகாநதி திரைப்படத்தில் அதை பதிவு செய்தார் கமல்.
2000 ஆம் வருடத்தில் வெளிவந்த ஹேராம் திரைப்படம் ஹிந்து முஸ்லிம் கலவரங்களை பற்றி அமைந்து இருந்தது.
>>சொல்லிவைத்தார் போல் இரண்டு வருடத்தில் குஜராத் கோத்ரா சம்பவத்தில் ஹிந்து முஸ்லிம் பிரச்சனை வெடித்தது.
சுனாமி என்று ஒரு வார்த்தையை அன்பே சிவம்(2003) என்ற திரைப்படத்தில் பயன்படுத்தினார் கமல்ஹாசன். இந்த படத்தை நன்றாக கவனித்தோர் அதை உணர்வர். சுனாமி என்கின்ற சொல் பலருக்கும் பரிட்சயம் ஆகாத சமயம் அது.
>>சரியாக 2004 ஆம் வருடத்தில் சுனாமியால் எண்ணற்ற மனித உயிர்களை கொன்று பெருத்த சேதத்தை உருவாக்கியது.
வேட்டையாடு விளையாடு என்ற படம் 2006 ஆம் ஆண்டு வெளிவந்தது. மனிதர்களை கொன்று புதைப்பது தான் அந்த படத்தில் வரும் இளமாறன் மற்றும் அமுதன் என்ற இரண்டு சைக்கோ கதாபாத்திரங்களில் வேலை.
>>மொனிந்தர் மற்றும் சதீஷ். சரியாக மூன்று மாதத்தில் நொய்டா தொடர் சைக்கோ கொலைச்சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தது.
அவருடைய தற்போதைய கடைசி படமான தசாவதாரம் 2008 இல் வெளிவந்தது. அமெரிக்காவில் இருந்து விமானம் மூலமாக இந்தியாவிற்கு வரும் ஒரு உயிர் கொல்லி வைரஸ் உலகை அழிக்க முற்படுவதே அந்த படத்தின் மையக்கரு.
2009……
>
>
இப்போது என்ன?
>
>
நியாபகம் வருகிறதா??
>>
சிந்தியுங்கள்…
>>>>>>>
கொஞ்சம் ஜீரணிக்க கடினமாக இருக்கலாம்.
அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தில் ஆரம்பமானதாக கருதப்படும். விமானம் மூலம் இந்திய வந்திருக்கலாம் என்று யூகிக்கப்படும் அந்த உயிர் கொல்லி வைரஸ் இப்போது உலகையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறது..அதன் பெயர் தான் SWINE FLU பன்றி காய்ச்சல்
இந்த சம்பவங்களை என்னவென்று சொல்வது? COINCIDENCE என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஒற்றுமை நிகழ்வுகளா? இல்லை புலப்படாத சக்தி கமலிடம் உள்ளதா?
எது எப்படியோ. தசாவதாரம் கிளைமாக்சில் வருவது போல் ரங்கராஜன் நம்பியோ இல்லை கோவிந்த் ராமசாமியோ எம்மக்களை அழிவிலிருந்து காப்பாற்றினால் கோடி புண்ணியம்…
ஓம்.. ……நமோ நாராயணாய…….
In fact you can find many of such things like Thenali (2000), Kuruthipunal (1996)… Only true kamal fans can understand it like tsumani in anabe sivam.
It is simple to address it as “coincidence”.. but his films are much ahead of all such incidents –
புலப்படாத சக்தி கமலிடம் உள்ளதா?
he himself can answer in his next film if he is a “mermayoki”
Hi praveen,
Really amazing ..I read your story which u wrote about the ulaga nayagan(kamal) film depends on the real life incident. its wonderful. Nobody can think like you . Everybody should read this news.Now I am waiting for the next film of kamal and little fear also what is the story and how it will interfere with our life.I hope the next file story should be very jovial. Keep on continue your post praveen :)….
நன்றி சுரேஷ்.. இவை அனைத்தும் என் மின்னஞ்சலிலும் குறுந்தகவலிலும் வந்தது. நான் படித்ததை பகிர்ந்து கொண்டேன். அவ்வளவே.