நான் மிகவும் நேசித்த என் மாமாவின் இறப்பு , என் நம்பிக்கைக்குரிய ஒரு நட்பின் இழப்பு என்று என் வாழ்நாளில் மறக்க முடியாத வருடம் கடந்த வருடம். மின்சார தட்டுபாடு முதல், வேலை இழப்புவரை பல தரப்பட்ட மக்களின் வேதனைகளை குவித்து விட்டது இந்த 2008 ஆம் வருடம்.
இதோ அணைத்து துயரங்களையும் அள்ளிக்கொடுத்த அந்த வருடம் நிறைவு பெறுகிறது. இதோ… புதிய நம்பிக்கையுடன் வரவேற்போம் இந்த புத்தாண்டை.. அனைவருக்கும் இனிய வருடமாக இருக்க ஆண்டவனை பிராத்திக்கிறேன்… அனைவரும் செல்வசெழிப்புடனும், மனிதநேயத்துடனும் வாழ உளமாற வாழ்த்துகிறேன்…