அலாரம் ஏதும் வைக்காமல்
தெருவில் குழந்தைகள் வெடிக்கும்
பட்டாசு சத்தத்தில் முனகியவாறே எழுந்து
அருகில் இருக்கும் மொபைலை தேடி எடுத்து
வந்திருக்கும் சில வாழ்த்து மெசேஜை படித்துவிட்டு
பதிலனுப்ப அதிக காசு என்பதால்
மீண்டும் அதை அப்படியே வைத்துவிட்டு
ஷாம்பு கண்டீசனர் போட்டு தலை குளித்து
மஞ்சள் தடவி புதுச்சட்டை உடுத்தி
கண்ணாடி முன் நின்று அலங்காரம் செய்து
சூடான அசைவ உணவை சாப்பிட்டுகொண்டே
வரவேற்பறை சென்று டீ.வியை ஆன் செய்து
ஏதோ ஒரு நடிகர் பேட்டியை பார்க்க ஆரம்பித்து
இரவு ஒரு புதுப்படத்துடன் முடியும்
ஒரு மகத்தான நாளாக மாறிக்கொண்டிருக்கிறது
இந்த தீபாவளித்திருநாள்!
– பிரவீன் குமார் செ
நிஜம் தான் உங்கள் கவிதை போல் தான் இன்றைய தீபாவளிகள் முடிகிறது வாழ்த்துகள் நண்பரே
தீபாவளி வாழ்த்துகள்.
அவ்வளவு தான்… முடிஞ்சி போச்சி…!