நெய்வேலி புத்தக கண்காட்சி 2004 லில் பரிசு பெற்று “நெய்வேலி கவிஞர்கள்” எனும் கவிதை தொகுப்பில் பிரசுரமான என் கவிதை. நெய்வேலி நூலகத்தில் புத்தகம் வைக்கப்பட்டு எனக்கு முதன் முதலில் அங்கிகாரம் பெற்று தந்த கவிதையிது. கல்லூரியில் இரண்டாம் வருடம் பயின்று கொண்டிருந்த சமயம் என்று நினைக்கிறன். நான் எப்பொழுதும் புத்தக புழுவாக வுர்ந்து கொண்டிருந்த நெய்வேலி நூலகத்தில் என் கவிதை இருந்தது ஒரு பெருமைக்குரிய விசயமாக கருதுகிறேன்..
மனிதமுயற்சி
- நிலவு சொந்தமில்லை
இருந்தும் கையை நீட்டியவாறு
சிறு குழந்தை…
- கூந்தல் சொந்தமில்லை
இருந்தும் மலர்ந்து கொண்டேயிருக்கும்
காகிதப்பூ..
- மழைத்துளி சொந்தமில்லை
இருந்தும் நம்பிக்கையுடன் வானம் பார்க்கும்
பாலைவன கள்ளிச்செடி..
- நாளை சொந்தமில்லை
இருந்தும் முயற்சியுடன்
மனிதன்….
– பிரவீன் குமார் செ