எனக்காக பிராத்தனை செய் சகோதரா

என்னுடைய மாமாவின் கடைசி மூச்சிற்கு சரியாக இன்றோடு ஒரு வருடம் முடிவடைகிறது. புற்றுநோய்க்கு வயது வித்யாசம் தெரியுமா என்ன?  முப்பத்தெட்டு வயதே உடைய மனிதரை அணு அணுவாய் சித்ரவதை செய்து கொலை செய்தது அந்த புற்று நோய். தான் சாகும் நாள் தெரிந்தே வாழ்வது தான் உலகத்தில் மிகபெரிய கொடுமை. அந்த மனவேதனையை சுமந்து கொண்டு இருப்பது சாமன்யமல்ல.

நிறைய உயிரிழப்புகளை  நாம் நம் வாழ்கையில் சந்திக்க நேரிடுகிறது. ஆனால் நமக்கு மிகவும் நெருக்கமானவர்களின், மிகவும் விருப்பமானவர்களின் இழப்பு தான் நம் மனதை புரட்டி போடும். அந்த வகையில்  இது என் வாழ்கையில் எனக்கு மிகவும் மறக்க முடியாத சம்பவம்.

என் வாழ்கையில் நான் நிறைய கற்றுக்கொண்டது அவர் இறப்பிற்கு பின்னரே. முதல் நாள், உயிருடன் இருக்கும் வரை  நம்முடைய பெயர் நமக்கு சொந்தம். இரண்டாம் நாள், நாம் இறந்த பிறகு நம்முடைய பெயர் பிணம். மூன்றாம் நாளோ அதன் பெயர் ஹஸ்தி. இருக்கும் வரை உயர்திணையில் நம்மை அழைக்கும் இவ்வுலகத்திற்கு இறந்த பின் நாம் வெறும் அக்றினையே.

போட்டி, பொறாமை போன்றவைகள் மனிதனின் வெறும் அற்ப ஆட்டங்கள். ஆட்டம் அடங்கினால் அவன் இந்த உலகத்தின் வாழ்ந்ததற்கான சுவடுகள் கூட இருக்காது. காலம் அதை தேடிச்சென்று அழித்துவிடும். இறந்தபின் நமக்காக சிந்தப்படும் கண்ணீர்த்துளிகளும், அவர்களின் மனதில் எழும் நம்முடைய இழப்பும் தான் நாமும் இந்த உலகத்தில் வாழ்ந்ததற்கான அடையாளங்கள். அவர் எங்களுடைய நினைவில் நீடூழி வாழ்வார். அவருடைய ஆன்மா சாந்தி பெறட்டும்.

எனக்காக பிராத்தனை செய் சகோதரா  –  இதோ  நான் பாடிய ஏ.ஆர்.ரஹ்மானின் ஒரு ஆங்கில பாடல் அவர் நினைவாக சமர்ப்பிக்கிறேன். இழப்புகள், அன்பு, கருணை, பரிவு என அனைத்தையும் இந்த பாடலில் உணர முடியும் என நினைக்கிறேன். கீழே அந்த ஆங்கில பாடலின் நான் எழுதிய தமிழாக்கத்தை காணலாம். அனைத்து புற்று நோயாளிகளுக்கும் சுகம் பெறவும், மக்களிடையே அன்பு மலரவும் பிராத்தனை செய்யுமாறு  இந்த இடுக்கையை படிக்கும் அனைவரையும் வேண்டுகிறேன்.
[xr_video id=”d00a157cbe51401ea8ecd7d978c9537d” size=”md”]

எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
எனக்காக பிராத்தனை செய் சகோதரி.
நீ தேடிக்கொண்டு இருக்கிறாயா?
எனக்காக பிராத்தனை செய் சகோதரா.

என்னுடைய வாழ்கையின்
எல்லா கேள்விகளுக்கும்
பதிலை எதிர்நோக்கியிருக்கிறேன்

என்னை தனியாக விட்டுச்செல்வாயா
இல்லையேல்
என்னருகில் துணையாக இருப்பாயா?

இது ஏதேனும் அவனால் சொல்லப்பட்டதா?
இது ஏதேனும் அவனால் செய்யப்பட்டதா?
எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது…

அவன்
விடைகளை தேடிக்கொண்டு இருக்கிறான்
உயிருடன் இருப்பதற்கு.

சரியான நேரத்தில்,
ஒரே ஒரு தருணத்தில்,
ஒரு நிமிடமாவது,
உன் உள்ளம் சொல்லவதை பொருட்படுத்தி கேட்பாயா?

நம்மை சுற்றி சந்தோசம் நிறைந்து இருக்கிறது,
ஆனால் நமக்கு தேவையான அன்பை
அதில் எப்படி பார்ப்பது என்று எனக்கு காண்பி.

நாம் அன்புடன் இருக்கவேண்டியதற்கான
காரணத்தை தேடுகிறாயா?

எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
எனக்காக பிராத்தனை செய் சகோதரி.
எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
என்று அவன் சொன்னான்..

இப்போதே என்ன கூற விரும்புகிறாயோ கூறு
ஆனால் உன் மனதை திறந்து வைத்துக்கொள்.
இப்போதே நீ எப்படி இருக்க விரும்புகிறாயோ அப்படி இருந்துக்கொள்
குழப்பங்களை அனைத்தும் மறைந்து போகட்டும்..
என்னக்காக பிராத்தனை செய் சகோதரா.

நீ கொடுக்க விரும்பாத போது
என்னை எடுக்க விடாதே…
என்னை வாழவிடு
அது போதும்…

நீ கொடுக்க விரும்பாத போது
என்னை எடுக்க விடாதே…
என்னை வாழவிடு
அது போதும்…

எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
எனக்காக பிராத்தனை செய் சகோதரா.
எனக்காக பிராத்தனை செய் சகோதரி.
எனக்காக பிராத்தனை செய் சகோதரா.

நாம் அன்புடன் இருக்கவேண்டியதற்கான
காரணத்தை தேடுகிறாயா?

நியூ யார்க் நகரம் – ஜில்லுனு ஒரு காதல் திரைப்பட வீடியோ பாடல் என் குரலில்

நியூ யார்க் நகரம் உறங்கும் நேரம்.. 2006 ஆம் வருடம் அணைத்து இளவட்டங்களையும் கட்டிப்போட்ட சில்லுனு ஒரு காதல் திரைப்பட பாடல்.. கவிஞர் வாலியின் உடலிற்கு தான் வயதானதே தவிர அவருடைய சிந்தனையும், மனதும் எப்போதுமே இளமை தான்… அதற்கு உதாரணம் தான் இந்த பாடல்..

இப்பாடலை பாடுவதற்கு பாடகரை தேர்வு செய்வதற்கு முன்னர், டைரக்டரிடம் காண்பிப்பதற்காக தானே டம்மியாக பாடி பதிவு செய்தார்  ஏஆர். ரஹ்மான்.  பிறகு அனைவரும் கேட்டுக்கொண்டதால் அவர் குரலிலேயே பாடல் பதிவு செய்யப்பட்டது.. எந்த பாடகருக்கு அந்த வாய்ப்பு சென்றிகுமோ தெரியாது. ஆனால் ஏ.ஆர். ரஹ்மான் குரலை எடுத்துவிட்டு என்னுடைய குரல் வைத்தால் எப்படி இருக்கும் என்று ஒரு சின்ன ஆசை தோன்றியது… ஹா ஹா ஹா… அதன் முயற்சி தான் இந்த வீடியோ… அவரின்   ஹை பிச் குரல் சில இடங்களில் எனக்கு வரவில்லை. கண்டுபிடித்து சொல்லுபவருக்கு ஏ.ஆர். ரஹ்மான் வாங்கிய ஆஸ்கார் விருது இலவசமாக தரப்படும்.. (புகைப்பட வடிவில்).. ஹி ஹீ ஹீ  🙂
[xr_video id=”fac290918ec14ba0996e4c012bbd15e8″ size=”md”]

இதோ போனஸாக அதன் பாடல் வரிகளும்….

நியூயார்க்  நகரம்  உறங்கும்  நேரம்  தனிமை அடர்ந்தது
பணியும்  படர்ந்தது .. கப்பல்  இறங்கியே  காற்றும்  கரையில்  நடந்தது.

நான்கு  கண்ணாடி  சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை  தனிமையோ….. கொடுமை  கொடுமையோ….

நியூயார்க்  நகரம்  உறங்கும்  நேரம்  தனிமை அடர்ந்தது
பணியும்  படர்ந்தது.. கப்பல்  இறங்கியே  காற்றும்  கரையில்  நடந்தது.

நான்கு  கண்ணாடி  சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை  தனிமையோ… கொடுமை  கொடுமையோ….

பேச்செல்லாம்  தாலாட்டு  போல என்னை  உறங்க  வைக்க  நீ  இல்லை
தினமும்  ஒரு  முத்தம்  தந்து  காலை  காபி  கொடுக்க  நீ  இல்லை
விழியில் விழும்  தூசி  தன்னை அதை  எடுக்க  நீ இங்கு இல்லை
மனதில்  எழும்  குழப்பம்  தன்னை  தீர்க்க  நீ இங்கே  இல்லை
நான்  இங்கே  நீயும்  அங்கே இந்த  தனிமையில்  நிமிஷங்கள்  வருஷம்  ஆனது ஏனோ
வான்  இங்கே  நீளம்  அங்கே  இந்த  உவமைக்கு  இருவரும்  விளக்கமானது ஏனோ

நியூயார்க்  நகரம்  உறங்கும்  நேரம்  தனிமை அடர்ந்தது
பணியும்  படர்ந்தது

நாட்குறிப்பில் நூறு தடவை உந்தன் பெயரை எழுதும் என் பேனா
எழுதியதும் எறும்பு மொய்க்க பெயரும் ஆனதென்ன தேனா

ஜில்லென்று பூமி இருந்தும் இந்த தருணத்தில் குளிர்காலம் கொடையனதேனோ

வா அன்பே   நீயும்  வந்தால்  செந்தணல்  கூட  பனிக்கட்டி  போல  மாறுமே

நியூயார்க்  நகரம்  உறங்கும்  நேரம்  தனிமை அடர்ந்தது
பணியும்  படர்ந்தது கப்பல்  இறங்கியே  காற்றும்  கரையில்  நடந்தது

நான்கு  கண்ணாடி  சுவர்களுக்குள்ளே நானும் மெழுகுவர்த்தியும்
தனிமை  தனிமையோ கொடுமை  கொடுமையோ

போகாதே போகாதே – தீபாவளி திரைப்பட வீடியோ பாடல் – என் குரலில்

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் பதிவு எழுதுகிறேன். தீபாவளி திரைப்படத்தில் வரும் “போகாதே போகாதே” என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடலில் ஒன்று.. நான் அதிகம் கேட்பதும், அதிகம் முனுமுனுப்பதும் இந்த பாடல்தான்.. ஒரு ”ஆர்வத்தில்” நானே பாடி, பதிவு செய்து, கேட்டு பார்த்தேன்.. நான்றாக இருந்தது போல் தோன்றியதால் இதோ  என் வலை பதிவின் மூலம் இணையத்தில் உலா வரச்செய்கிறேன்… ஹீ ஹீ ஹீ

சென்ற  வருடமே என் குரலில் நான் பதிவு செய்த இந்த பாடல், நேற்று தான் வீடியோவில் புகுத்தி யூடுபில் ஏற்றினேன்.. பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். இந்த பாடலை திரையில் பின்னணியில் பாடிய யுவன் ஷங்கர் ராஜாவை விட சூப்பர் என்று எழுதி காமெடி கீமடி பண்ண கூடாது.. ஆமா..  சொல்லிட்டேன்..  🙂

[xr_video id=”5ffc6630ec0646b9a27e7e0594ccb6c8″ size=”md”]

இதோ போனஸ் ஆக அதன் பாடல் வரிகளும்…

போகாதே… போகாதே…. நீ இருந்தால் நான் இருப்பேன்..
போகாதே…. போகாதே….. நீ பிரிந்தால் நான் இறப்பேன்.

உன்னோடு வாழ்ந்த…  காலங்கள் யாவும்…  கனவாய் என்னை மூடுதடி…
யாறென்று நீயும்… என்னை பார்க்கும் போது… உயிரே உயிர் போகுதடி….
கல்லறையில் கூட…  ஜன்னல் ஒன்று வைத்து… உந்தன் முகம் பார்ப்பேனடி…

போகாதே… போகாதே…. நீ இருந்தால் நான் இருப்பேன்..
போகாதே…. போகாதே….. நீ பிரிந்தால் நான் இறப்பேன்.

கலைந்தாலும் மேகம் அது மீண்டும் மிதக்கும்.
அதுபோல தானே உந்தன் காதல் எனக்கும்.
நடைபாதை விளக்கா காதல் விடிந்தவுடன் அணைப்பதற்கு.
நெருப்பாலும் முடியாதம்மா நினைவுகளை அழிப்பதற்கு..
உனக்காக காத்திருபேன்…. உயிரோடு பார்த்திருபேன்….

போகாதே… போகாதே…. நீ இருந்தால் நான் இருப்பேன்..
போகாதே…. போகாதே….. நீ பிரிந்தால் நான் இறப்பேன்.

அழகான நேரம் அதை நீ தான் கொடுத்தாய்.
அழியாத சோகம் அதையும் நீ தான் கொடுத்தாய்.
கண் தூங்கும் நேரம் பார்த்து கடவுள் வந்து போவதுபோல்
என் வாழ்வில் வந்தாய் ஆனால் ஏமாற்றம் தாங்கலையே.
பெண்ணே நீ இல்லாமல்… பூலோகம் இருண்டதடி

போகாதே போகாதே நீ இருந்தால் நான் இருப்பேன்
போகாதே போகாதே நீ பிரிந்தால் நான் இறப்பேன்

நெஞ்சுக்குள் பெய்திடும், வாரணம் ஆயிரம் வீடியோ பாடல் – என் குரலில்

[xr_video id=”1bc01154ca924dfa9b38bf44295b6258″ size=”md”]

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, வாரணம் ஆயிரம் திரைப்பட வீடியோ பாடல்…. மீண்டும் என் குரலில்…  ஹரிஹரனை தவிர வேறு யாரும் இந்த அளவுக்கு அற்புதமாக பாடிஇருக்க முடியாது.. “என்னோடு வா வீடு வரைக்கும்… என் வீட்டை பார் என்னை பிடிக்கும்…” கவிஞர் தாமரையின் மனதை தொடும் பாடல் வரிகள்… எனக்கு மிகவும் பிடித்த சமீபத்திய திரைப்பட பாடல் இது. உங்களுக்கு? கேட்டுவிட்டு எப்படி இருக்கிறது என்று கீழே கமெண்ட் செய்யவும்.

ஒ சாந்தி சாந்தி – வாரணம் ஆயிரம் வீடியோ பாடல் – என் குரலில்

[xr_video id=”cbd7b784408e46b38addf85409197cca” size=”md”]

மேலே இருக்கும் “ஒ சாந்தி சாந்தி” என்ற வாரணம் ஆயிரம் வீடியோ பாடல் என் குரலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இசை, வீடியோ இரண்டும் ஒரிஜினல்… குரல் மட்டும் தான் என்னுடையது… கேட்டுவிட்டு எப்படி இருக்கிறது என்று கீழே கமெண்ட் செய்யவும். 🙂