“பத்தாயிரத்தில் பாங்காக்” என் விகடன் கட்டுரை

praveen bangkok article

விகடனுக்காக பிரத்தியேகமாக நான் எழுதிய கட்டுரை இந்த வாரம் “என் விகடனில்” வெளியாகியுள்ளது. சில வாரங்களுக்கு தொடர்ந்து அதில் கட்டுரை எழுதக்கேட்டு இருந்தார்கள். என்னுடய தாய்லாந்து பயணத்தை ஐந்து வாரங்கள் எழுதுவதாக உத்தேசித்து தொடரை ஆரம்பித்தேன். முன்னர் அச்சில் வந்துக்கொண்டு,  பிறகு இணையத்தில் மட்டும் காணக்கிடைத்த “என் விகடன்”, எதிர்பாராவிதமாக இந்த வாரத்தில் இருந்து முற்றிலும் நிறுத்தப்படுகிறது.

முதல் பாகம் கட்டுரை முடித்து அனுப்பப்பட்டு இருந்த சூழ்நிலையில் அதை அவசர அவசரமாக முடிவுருமாறு மீண்டும் திருத்தி  அனுப்பினேன். அதாவது கட்டுரையில் தாய்லாந்து பயணத்திற்குள் நுழைவதற்குள்ளாகவே அதை முடிக்க வேண்டியதாயிற்று. பயணத்தை பற்றிய எதிர்பார்போடு முடிக்கப்பட்ட அந்த கட்டுரை முற்றுபெறுமாறு மாற்றியதில் அந்த கட்டுரை ஆசிரியனாய் எனக்கு திருப்தி இல்லை. அடுத்த வாரம் முதல் அந்த கட்டுரையை என்னுடைய இந்த இணையதளத்தில் தொடருவதாக உள்ளேன்.  “என் விகடனில்” வந்த என் கட்டுரையை படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்.

http://en.vikatan.com/article.php?aid=26671&sid=789&mid=32

இரு மாதங்களுக்கு முன்னர் என்னுடய வலைப்பூவும் அதில் எழுதிய கட்டுரையும் விகடனில் வந்த போது நான் எழுதிய அந்த வரிகளை இப்போது நினைவுக்கு வந்து போகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் என் விகடன் அட்டை படத்தில் என் புகைப்படத்துடன் என்னை பற்றி கட்டுரை வந்த போது இல்லாத ஒரு சிலிர்ப்பு இப்போது என் எழுத்தை விகடனில்  காணும்போது கிடைக்கிறது. அது மட்டுமில்லாமல் “ஆனந்த விகடனிலும்”, “ஜூனியர் விகடனிலும்” அந்த கட்டுரைக்கு வாசகர்களை கவர அவர்கள் கொடுத்த விளம்பரம் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது.  நிச்சயம்  இதோடு முடியபோவதில்லை விகடனுக்கும் எனக்குமான பந்தம் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

9 thoughts on ““பத்தாயிரத்தில் பாங்காக்” என் விகடன் கட்டுரை”

  1. திட்டமிட்ட வாழ்க்கை தெவிட்டாத இன்பம் என்ற பழமொழியை மெய்ப்பிக்கிறது உங்கள் பயணம்.லாப நோக்கத்தில் பயண முகவாண்மை நிறுவனங்கள் நடத்துபவர்கள் உங்களைப்போல் திட்டமிட மாட்டார்கள்.என்றாவது வெளிநாடு செல்ல நேர்ந்தால் உங்கள் உதவியை நாட மறக்க மாட்டோம். 🙂

  2. ,
    Dear Sir,

    Kindly send your full detail of Bankok visit to me for my use in my future visit to there.Thanking you sir inanticipation

    s,s,radhkrishnan

  3. பிரவின் உங்கள் துணையுடன் இலங்கை வெகு தூரமில்லை….

  4. I am planning to visit BAngkok during this Summer vacation .

    pl send the details , Places to visit , Cost etc, ..

    Thanks in advance . — M. MURALI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *