என் பார்வையில் அயன் திரைப்படம்.

நேற்று அயன் திரைப்படம் இரவு  காட்சிக்கு சென்று இருந்தேன் (தோம்). எதிர்பாராவிதமாக நாங்கள் செல்வதற்குள் பத்து  நிமிடம் படம் ஓடி இருந்தது.. இருந்தால் என்ன?  தமிழ் படத்தின் கதை புரியாமலா போய்விடபோகிறது என்று பார்க்க ஆரமித்தேன். வழக்கம் போல் சூர்யா சூப்பர்.. மேலும் மேலும் மெருகேறிக்கொண்டே இருக்கிறது  நடிப்பும், அழகும்..    அட.. தமனாவும் தான்பா நடிக்க ஆரம்பித்துவிட்டது….

“நெஞ்சே… நெஞ்சே…” , ”விழி மூடி யோசித்தால்..” பாடலும் அனைவரும் முனுமுனுக்கும் பாடலாக இருக்கும்.. ஆனால் ”நெஞ்சே… நெஞ்சே…”  பாடல் படமாக்கப்பட்ட அந்த ஆப்ரிக்க பாலைவனம் ஹிந்தி கஜினியில் ஏற்கனவே பார்த்து விட்டதால் புதுமையாக தெரியவில்லை.  ஹிந்தி கஜினியை விட தமிழில் தான் அற்புதமாக ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்கள்.  என்னுடைய மொபைல் ஹலோ டுயுன் இப்போது அந்த பாடல் தான் .. பின்னணி இசையும் அருமை.. ஹாரிஸ் ஜெயராஜை பத்தி சொல்லவா வேண்டும்?

ayan-surya-tamanna

சண்டை காட்சிகள், ஒளிப்பதிவு கண்டிப்பாக அனைவரையும் பிரமிக்கவைக்கும்.. ஆப்ரிக்கா அந்த மலைப்பாதை காட்சிகளும், மலேசியா கார் துரத்தும் காட்சிகளும் கண்டிப்பாக தமிழுக்கு புதுசு.. கதை என்னவென்றால், நம்ம சூர்யா ஒரு ஹைடெக் கடத்தல்காரன்..  பிரபு நம்ம சூர்யாவுக்கு பாஸ். விஜய் தொலைக்காட்சிகளில் வரும் அந்த நபர்(மன்னிக்கவும் பெயர் தெரியவில்லை) சூர்யாவின் நண்பர். தமன்னா அவரின் தங்கை. தொழில் போட்டியில் பிரபு சாகிறார்.. சூர்யா வில்லனை பழி வாங்குகிறார்.. கடத்தலை விட்டு விட்டு திருந்துகிறார். கடைசியில் கஸ்டம்ஸ் ஆபிசர் ஆகிறார்.. மறக்காமல் தமன்னாவை கைபுடிக்கிறார்.

உலகில் இருக்கும் அணைத்து பெரிய கடதல்கார்களும் பிரபுவுக்கு பழக்கம்.. ஆப்ரிக்கா மலைபகுதிகளில் வாழும் ”மம்போ” என்ற யாரும் நெருங்க முடியாத ஒரு அதிபயங்கர  கடத்தல்காரராக காண்பிக்கபடுபவர்கூட நம்ம பிரபுவுக்கு பழக்கமாம். பிரபுவை பார்த்தால்  அப்படி கண்டிப்பாக தெரியாது.. முன்னொரு காலத்தில் பெரிய தாதாவாக இருந்தாரம். படத்தில் பிளாஷ் பாக் காட்சிகள் கூட இல்லாததால் நம்ம  பிரபு ஒரு காமெடி தாதாவாகவே வலம் வருகிறார்.. அவருக்கு கைபுல்லையாக நம்ம சூர்யா தம்பி.. அங்கேயே எனக்கு படத்தின் மேல் இருந்த நம்பிக்கை போய்விட்டது..

ayan

நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் சூர்யா, ஆப்பிள் ஐ போன் வைத்து இருக்கிறார், ஆப்பிள் மாக் லேப்டாப் வைத்து இருக்கிறார் , நினைத்தால் வெளிநாடு கிளம்புகிறார், கூகிள் இணையத்தளத்தில் கடத்தல் செய்யும் டெக்னிக்குகளை கண்டுபிடிக்கிறார்.. எல்லாம் பண்றார்..  அப்புறம் எதற்கு பிரபுவுக்கு  கைபுல்லையாக? பெருசா காரணம் இல்லையே?  சூர்யாவின் நண்பராக வரும் அந்த கதாபாத்திரம் எரிச்சலோ எரிச்சல்.. (நல்ல வேலை பாதியிலேயே அவர் இறந்து விடுவதால் பார்வையாளர்கள் தப்பித்து கொண்டார்கள்).. தங்கை தமன்னா சூர்யாவை  காதலிக்க வைக்க அவர் பேசும் வசனங்கள், செயல்கள் அருவருப்பு. கிரி  படத்தில் வடிவேலு சொல்லும் ”பட் அந்த டீலிங் எனக்கு புடிச்சிருந்தது” ரகம்.. அது காமெடி..ஆனா இது அருவருப்பு.. தங்கச்சிய பத்தி எந்த அண்ணன் இப்படி  பேசுவான்? அது மட்டும் இல்லாமல்.. படத்தில் ரசிக்க முடியாத பல இரட்டை அர்த்த வசனங்கள் நம்ம சூர்யா பேசுகிறார். கொடுமை..

அருமையான கதைக்களம், நடிப்பில் மெருகேறிய சூர்யா, அழகிய தமன்னா, பிரமிக்க வைக்கும் சண்டைகாட்சிகள்,  தமிழுக்கு புதிய வெளிநாட்டு படபிடிப்பு இடங்கள்…. இவை அனைத்தும் இருந்தும் திரைக்கதை, காட்சி அமைப்பு, வசனங்கள் இல்லையே  டைரக்டர் ஆனந்த் சார். இப்படி துட்ட விரயம் பண்ணிடீன்களே? பேசாமல் நம்ம எழுத்தாளர் சுபா எழுதிய இந்த கதையை நாவலாக பிரசுரம் செய்து இருந்தால்.. ஏ.வீ .எம்  மின் பணம் மிச்சம். நீங்க என்ன சொல்றீங்க? படம்  நல்ல இருக்கா, நல்லா இல்லையா? உங்களுக்கு பிடித்தது, பிடிக்காதது எதை வேண்டுமானாலும் கீழே பதிவு செய்யவும்.

இதோ மேலும் சில பேர் அயன் படத்தை கிழி கிழின்னு கிழிச்சு இருக்காங்க.

ஆனா அந்த அளவுக்கு படம் மோசமில்லைன்னு நினைக்கிறன்..

4 thoughts on “என் பார்வையில் அயன் திரைப்படம்.”

  1. Sir – ur tamil is definitely good – liked your language and the flow but unfortunately some of what you have stated here is inappropriate. I have to disagree with you in a lot of places.
    Suriyas friend was definitely good in terms of comedy – comedy was so well blended in the movie than being a separate non-gelling track. As you have stated when it can be accepted in Giri by Vadielu why not in Ayan by Chitti (my apologies – I too dont know his name) – it is a comedy in this movie too.
    Suriya’s double meaning dialogues are pretty subtle unlike his counterparts in the other movies – not sure why this has bothered u so much.

    The links that you have provided below – esp mothshut and searchindia – both dont deserve to comment a movie – I have followed a couple of reviews from search india – whoever it is has a great English – thats it – nothing more than that. He/She has not written a good review in a long time now – both these follow cheap strategy – when u write a good review about a movie that is good, it will be one in a thousand and may/may not get noticed.
    But when you criticize a movie that is good very badly your posting tends to get some attention – both these (mouthshut and searchindia) fall in this category.
    So please dont give these links in your post and spoil the standard of your blog.

    Ayan is definitely an elegant entertainer and can be watched atleast once – and Suriya is a delight to any director!

  2. Hi Meena.. Thanks for your comment on my Tamil. As you said, I agree, the movie is worth to watch for suriya, camera, songs and much more. My point was that Director should have utilized/used every thing well.

  3. அன்பு நண்பர் பிரவீன் அவர்களுக்கு,
    முதலில் தமிழை எழுத்துப் பிழை இல்லாமல் எழுத கற்றுக் கொள்ளுங்கள். எனென்றால் “தமிழே ஒழுங்கா தெரியல இவனெல்லாம் திரைப்பட விமர்சனம் எழுத ஆரம்பிச்சுட்டான்” என்று மற்றவர்கள் கேலி செய்வார்கள்.கே வீ ஆனந்த் ஒரு தேசிய விருது பெற்ற படைப்பாளர் அவரை கிண்டல் செய்வதும், “நாவலாக பிரசுரம் செய்து இருந்தால்.. ஏ.வீ .எம் மின் பணம் மிச்சம்” என்று சொல்வதும் அதிக பிரசங்கித்தனம். இவ்வளவு புத்திசாலியான நீங்கள் தமிழ் படங்களை பார்பதே அபத்தம்.
    இத்தனை இளம் வயதில் இரட்டை அர்த்த வசனங்களை வெறுக்கும் உங்களை பார்கையில் பிற்காலத்தில் ஒரு விவேகனந்தரை போல வருவீர்கள் என்று எண்ணுகிறேன்…வாழ்த்துகள்

  4. வணக்கம் செந்தில் அண்ணா,

    உங்கள் கருத்துக்களை பதிவு செய்ததற்கு நன்றி. எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும். அது கண்டிப்பாக தட்டச்சு செய்யும் பொது ஏற்பட்ட பிழையாகத்தான் இருக்குமென்று நினைக்கிறன். உங்கள் எழுத்துக்களில் காணப்படும் சிற்சிறு பிழைகளுக்கும் அதுவே காரணமென நான் கருதுகிறேன் ..

    தமிழில் பேசுவதையே அற்பமாக கருதும் இவ்வுலகில், எழுத்துபிழையோடு நான் எழுத முயற்சிப்பதை நான் பெருமையாகவே நினைக்கிறன் அண்ணா… ம்ம்.. அப்புறம்.. தமிழ் எழுத தெரிந்தால் தான் திரைப்படத்தை விமர்சனம் செய்யனும்னு யாருங்க்னா சொன்னாங்க? தமிழை எழுத படிக்க தெரியாத பாமரன் பார்த்துட்டு வந்து விமர்சனம் பண்ணினால் தானுங்கணாஅந்த படமே ஓடும். இதை நிறைய படைப்பாளிகள் சொல்லி நான் கேட்டிருக்கிறேன்.. நீங்களும் கேட்டு இருப்பீங்கன்னு நினைக்கிறன்..

    கே வீ ஆனந்த் ஒரு தேசிய விருது பெற்ற படைப்பாளர் அவரை கிண்டல் செய்வதும், “நாவலாக பிரசுரம் செய்து இருந்தால்.. ஏ.வீ .எம் மின் பணம் மிச்சம்” என்று சொல்வதும் அதிக பிரசங்கித்தனம்.

    கே. வீ. ஆனந்த் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளரா? இல்லை படைப்பாளியா? ஏனிப்படி குதர்க்கம் பண்ணுகிறீர்கள் செந்திலண்ணா?
    தெரிந்து கொள்க: http://en.wikipedia.org/wiki/K._V._Anand#Awards

    அவர் தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர்..

    அவருடைய ஒளிபதிவாற்றல் திறமைக்கு நானும் தான் ரசிகன்.. அதற்காக அவர் எழுதிய(எழுத்தாளர் சுபாவுடன் சேர்ந்து) திரைக்கதை, காட்சி அமைப்பு வசனத்தை சுமார் தான் என்று சொல்லக்கூடாதா? எந்த ஊரு நியாயம்ங்க்னா இது? ஒரு தேர்ந்த சமையல்காரன் நன்றாக கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் எழுதியே தீருவான் என்று சொல்வது போலல்லவா இருக்கிறது?

    இத்தனை இளம் வயதில் இரட்டை அர்த்த வசனங்களை வெறுக்கும் உங்களை பார்கையில் பிற்காலத்தில் ஒரு விவேகனந்தரை போல வருவீர்கள் என்று எண்ணுகிறேன்…வாழ்த்துகள்

    ரொம்ப நன்றீ செந்தில் அண்ணா. சந்தோசமான விஷயம்தானே?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *