தமிழில் எழுத வாரீகளோ? தமிழில்..

சில நாழிகைக்கு முன்பு JOOMLA எனும் ஒரு Content Management System முடைய FORUM மை  பார்க்க நான் நேரிட்டது. அது முற்றிலும் ஒரு இணைய தளத்தை உருவாக்கி பயன்படுத்த உதவும் ஒரு மென்பொருளுடைய இணைய தளமாகும். அத்தகைய இணையத்தளத்தில்   “தமிழ் குழுமம் (Tamil Translation)” என்று ஒரு தலைப்பை  நான் பார்த்த மாத்திரத்திலேயே அதை ஆவலோடு படித்தேன். அதிகமாக ஆங்கில பயனாளர்கள் உலவும் அந்த தளத்தில் தமிழ் குழுமமா? எந்த தமிழனுக்கு தான் ஆவல் வராது அதை படிக்க?

http://forum.joomla.org/viewtopic.php?p=569110

write-in-tamil

தமிழில் விவாதிக்க, தூய தமிழில் எழுத முடியாத வார்த்தைகளை தமிழாக்கம் செய்து எழுத அனைத்து ஜூம்லா பயன்படுத்தும் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தார் அந்த தமிழன்பர். நல்ல முயற்சி..  அடுத்து என்ன? வளர்ந்ததா தமிழ்? இல்லையப்பா… இல்லை…  அடுத்த விவாதமே “எனக்கு தமிழ் எழுத்துக்கள் புரியவில்லை! யாரவது அவர் எழுதியதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் அனைத்து மொழிதரப்பினற்கும் பயன்படும்” என்ற தோணியில் எழுதப்பட்டு இருந்தது… என்ன கொடுமை சரவணன் இது??

“ஆங்கிலத்தில் எழுதாதீர்கள்… தமிழில் எழதுங்கள்” என்று எழுதவேண்டுமானால் , அதையும் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் போல இருக்கிறதே? அடேங்கப்பா. இதில் மேலும் கொடுமை என்னவென்றால் தமிழில் அழைப்பு விடுத்த அந்த நண்பரே ஆங்கிலத்தில் அதை மொழிபெயர்க்க வேண்டிய சூழ்நிலையில் இருந்துள்ளார். இதில் கவனிக்கத்தக்க விஷயம், கடைசி வரை தமிழயே அதில் காணவில்லை. பின்பற்றி எழுதிய அனைவரின் விரல்களில் இருந்து ஆங்கில எழுத்துக்களே சிதறியுள்ளது…

ஒரு பக்கத்தில், இலங்கையில் தமிழ் மொழியை கற்பிக்க விடாமல் ஒரு மொழியை அழித்து அதன் இனத்தை அழிக்க முயற்சி நடக்கும் வேலையில். தமிழனை திரட்டி தமிழில் இணையபக்கத்தில் எழுத வைக்க முடியவில்லை என்பது வேதனை அழிக்கக்கூடிய விசயமாக இருக்கிறது. தமிழை வளர்க்க தமிழனே முன்வராததால் தான் இன்னும்  இணையத்தில் தமிழில் எழுச்சி மற்ற மொழிகளை காட்டிலும் மந்தமாகவே இருக்கிறது.

தமிழில் எழுத வாரீகளோ? தமிழில்!!!!!!
அட யாரவது வாங்கப்பா…..

என் பார்வையில் கஜினி தமிழும், கஜினி ஹிந்தியும்

ஒரு வாரத்திற்கு பிறகு நேற்று தான் கஜினி ஹிந்தி படத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைத்தது… ஏற்கனவே தமிழில் பலமுறை நான் பார்த்து ரசித்து பிரமித்த ஒரு திரைப்படம். அதே தான் ஹிந்தியிலும் என்று தெரிந்தும் நான் இப்போது கஜினி ஹிந்தியில் பார்க்க சென்றதற்கு மூன்று காரணங்கள் உண்டு.

ஒன்று ரஹ்மான், இரண்டு  ஆமிர் கான், மற்றொன்று முருகதாசின் திரைக்கதை… கஜினி தமிழில் பின்னணி இசை முதல் பாடல்கள் வரை அனைத்தும் இன்னமும் நான் தினமும் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்… அதே காட்சிகளுக்கும், பாடல் situationனுக்கும் ரஹ்மானின் ரசனை என்ன? அவர் அமைக்கும் பின்னணி இசை என்ன? ரஹ்மானும், தமிழில் இசை அமைத்த ஹாரிஸ் ஜெயராஜும் எப்படி மாறுபடுகிறார்கள் என்று உணரும் சந்தர்ப்பமாக இந்த ஹிந்தி படத்தை கருதினேன்.

ghajini-tamil

ஹிந்தி பின்னணி இசையில் என்னை பொறுத்த வரையில் துரத்தும் காட்சிகள், சண்டை காட்சிகள் போன்ற விறுவிறுப்பான காட்சிகளில் ரஹ்மானின் இசை மிரட்டுகிறது. ஆனால் ரொமான்ஸ், உணர்வுகளை (Emotions) வெளிப்படுத்தும் காட்சிகளில் ஹாரிஸ் ஜெயராஜின் இசையே மெய்சிலிர்க்க வைக்கிறது. சூர்யா முதன் முதலாக அசினை காணும் போதும், புத்தாண்டின் பொது காதலை வெளிப்படுத்தும் போதும் இருந்த ஹாரிஸ் ஜெயராஜின் இசையின் உயிர் ஹிந்தியில் இல்லை.

மேற்கொண்ட வகையான காட்சிகளில் பாடல்களில் இசை வைத்தே ஒப்பேற்றி இருக்கிறார் ரஹ்மான் என்றே எனக்கு தோன்றுகிறது… தமிழ் கஜினியின் பின்னணி இசை இன்னமும்  என்னுடைய HTC TOUCH WINDOWS செல்போனில் ரிங்டோனாக உள்ளது. ஹாரிஸின் பின்னணி மெனக்கெடல் தமிழில் கஜினி மிகவும் ரசித்த அனைவருக்கும் நன்றாக தெரியும்.

பாடல்களை பொறுத்தவரை குறைசொல்ல ஏதும் இல்லை. ஏற்கனவே ஹிந்தியில் சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கிறது.. ஹிந்திக்கு ஏற்றவாறு “ஒரு மாலை” (பெக்கா), “ரஹாதுல” (அயே பச்சு), சுட்டும்  விழி சுடரே (குஜாரிஷ்), எக்ஸ் மச்சி (லடூ) போன்ற பாடல்கள் இருக்கிறது… மூன்று பாடல்கள் மிகவும் ரசிக்க வைக்கிறது… ஆனால் “கைசே முஜே”  என்ற  பாடல் வேறு ஒரு காட்சிக்கு இடையில் மனதை உருக்கும் ஒரு பாடலாக இருக்கிறது… தமிழில்  இது இருந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது..

ghajini-hindi

ஆமிர் கான்… கண்களிலேயே பேசும் ஒரு நடிகன். முதல் பாதியின் போது தமிழ் கஜினியில் இருந்து மீள முடியாததால், சூர்யாவின் நடிப்பும், ஹாரிஸின் பின்னணி இசையும் வந்து போனது. ஆனால் பிற்பாதியில் ஏற்பட்ட திரைக்தை மாற்றத்தாலும், காட்சி அமைப்புகளாலும் படத்தோடு ஒன்றி போக செய்தது. புதிய அனுபவம். படத்தின் முடிவில் அவ்வளவு அழுத்தம் மிக்க உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சி அமைப்பு. திரைக்கதையை பொறுத்தவரை ஹிந்தி கஜினி செதுக்கப்பட்டுள்ளது.. சூர்யா… you really missed it. At least tamil audience missed it. The most emotional moments… mind blowing scenes.

மொத்தத்தில் , ஹிந்தி கஜினியின் திரைக்கதையில், தமிழ் கஜினியின் பின்னணி இசையில் சூர்யா நடித்திருந்தால்… தமிழ் ரசிகர்ளின் மனதை விட்டு அது சுலபத்தில் அகலாது.. நீங்கள் என்ன நினைகிறீர்கள்? உங்களுக்கு பிடித்ததும் பிடிக்காததும் என்ன? உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்..

கண்ணீர் இருப்பில்லை – சுனாமி கவிதை

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களை கண்டு என் மனம் பாதிக்கப்பட்டபோது எழுதிய வரிகள்…

tsunami-pain-peom

கண்ணீர் இருப்பில்லை

அலைகடலே
உன் கரையில் விளையாடியது குற்றமென
பிஞ்சுகளின்
உயிரோடு விளையாடிவிட்டாய்.

உன் மடியில்
வலை வீசியது குற்றமென
மீனவர்களின்
உயிரை விலை பேசிவிட்டாய் .

குழந்தைகளை பிரித்து
பெற்றோர்களை அனாதயாக்கினாய்
பெற்றோரை பிரித்து
குழந்தைகளை அனாதயாக்கினாய்.

இன்னும்
யாரை பிரிக்க
அலை அலையாய்
அலைந்துகொண்டு இருக்கிறாய்?

இங்கு இறப்பதற்கு
இன்னும் தான் மிச்சம்மிருக்கிறோம்
இறந்த பின் சிந்துவதற்கு
கண்ணீர் தான் இருப்பில்லை…

– பிரவீன் குமார் செ

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – 2009

நான் மிகவும் நேசித்த என் மாமாவின் இறப்பு ,  என்  நம்பிக்கைக்குரிய  ஒரு நட்பின்  இழப்பு என்று என் வாழ்நாளில் மறக்க முடியாத வருடம் கடந்த வருடம். மின்சார தட்டுபாடு முதல், வேலை இழப்புவரை பல தரப்பட்ட மக்களின் வேதனைகளை குவித்து  விட்டது இந்த 2008 ஆம் வருடம்.

New year 2009

இதோ அணைத்து துயரங்களையும் அள்ளிக்கொடுத்த அந்த வருடம் நிறைவு பெறுகிறது.  இதோ… புதிய நம்பிக்கையுடன் வரவேற்போம் இந்த புத்தாண்டை.. அனைவருக்கும் இனிய வருடமாக இருக்க ஆண்டவனை பிராத்திக்கிறேன்… அனைவரும் செல்வசெழிப்புடனும், மனிதநேயத்துடனும் வாழ உளமாற வாழ்த்துகிறேன்…

நெஞ்சுக்குள் பெய்திடும், வாரணம் ஆயிரம் வீடியோ பாடல் – என் குரலில்

[xr_video id=”1bc01154ca924dfa9b38bf44295b6258″ size=”md”]

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, வாரணம் ஆயிரம் திரைப்பட வீடியோ பாடல்…. மீண்டும் என் குரலில்…  ஹரிஹரனை தவிர வேறு யாரும் இந்த அளவுக்கு அற்புதமாக பாடிஇருக்க முடியாது.. “என்னோடு வா வீடு வரைக்கும்… என் வீட்டை பார் என்னை பிடிக்கும்…” கவிஞர் தாமரையின் மனதை தொடும் பாடல் வரிகள்… எனக்கு மிகவும் பிடித்த சமீபத்திய திரைப்பட பாடல் இது. உங்களுக்கு? கேட்டுவிட்டு எப்படி இருக்கிறது என்று கீழே கமெண்ட் செய்யவும்.