18.10.2010 அன்று சேலத்தின் முதன் நான்கு நட்சத்திர ஹோட்டல் என்ற அந்தஸ்துடன் ஜி.ஆர்.டீ. கிராண்ட் எஸ்டான்சியா திறக்கப்பட்டது. நானும் நண்பரும் மூன்றாம் நாளான நேற்று (20-10-2010) மாலை இரவு எட்டு மணி சுமாருக்கு சென்றோம். தற்சமயம் ஒரே ஒரு பல்வகை உணவகம்! (Multi-Cuisine Restaurant) மட்டுமே அங்கு துவக்க நிலையில் இயக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. பப்பெட் (Buffet) உணவு முறையில் வழங்கப்பட்ட அந்த உணவகத்தில் மூன்றாம் நாளாக இருந்த போதிலும் கூட்டம் நன்றாக இருந்தது. சேலத்தில் கண்டிப்பாக இப்படி ஒரு உணவகம் இல்லை. அறுசுவை உணவுகள் அனைத்தும் அருமையாக இருந்தது. வாய்ப்பு கிட்டினால் நீங்களும் சென்று விட்டு வரவும் சென்று விட்டு வரவும். நபர் ஒருவருக்கு சேவை வரி தவிர்த்து ரூபாய் நானூறு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால் கண்டிப்பாக அதற்கு மதிப்புள்ளது. இன்னும் சிலவாரங்களில் தென்னிந்திய உணவகம் ஒன்றும் அங்கு துவங்கப்பட நிலையில் உள்ளது.
இந்த கட்டடம் கட்டும்பொழுது நான் இதை ஏதாவது அலுவலகம் வரும் என்று நினைத்திருந்தேன். ஊருக்கு வரும்பொழுது சென்று பார்க்க வேண்டும்!
அருமையான பகிர்வு. சற்று ஏமாற்றமும் கூட. ஒரே பந்தியில் முடித்துவிட்டீர்களே!
where in salem?
@கார்த்திக் பெங்களூர் பைபாஸ் ரோடு, குரங்குசாவடி…
@கரா. கண்டிப்பாக செல்லுங்கள். அருமையான இடம்.
கண்டிப்பா போய்ட்டு வந்திடுவோம்….
@ஈசீக்.. மிக்க நன்றி. இதையும் நரேடிவ் ஸ்டைலில் எழுதி இருக்கலாம். இன்னும் கொஞ்சம் நீண்டு இருந்தாலும் வாசிப்பவர்களை எரிச்சலாக்கிவிடும் அபாயம் இருக்கிறது.நான் அங்கு சென்றதும், என்ன உண்டேன் என்பதும் இங்கே யாருக்கு என்ன கவலை? ஹா ஹா.. 🙂
@ ரமேஷ். என்ஜாய்…. 🙂
ஹி ஹி.. சேலம் இனி கலை கட்டும் ..